நெல்லிக்காயை சாப்பிடக்கூடாத 4 வகையினர்.. உஷார்.!  - Seithipunal
Seithipunal


நெல்லிக்காய் உடலுக்கு அதிக அளவு நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு கனி. ரத்த சர்க்கரை அதிகமாக இருப்பவர்களுக்கு இது அருமருந்து என்று கூறப்படுகிறது. பல்வேறு பிணைகளை நீக்கக்கூடிய தன்மை கொண்ட இந்த நெல்லிக்காயை கீழ் காணும் நான்கு வகையினர் சாப்பிடக்கூடாது. 

சர்க்கரை குறைவாக இருக்கும் நபர்கள் இந்த நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் இருக்கும் ரத்த சர்க்கரை அளவானது மிகவும் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் நெல்லிக்காயை எடுத்துக் கொள்வதால் மேலும் சர்க்கரையின் அளவு குறையக்கூடும். எனவே சர்க்கரை அதிகம் உள்ளவர்கள் நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளலாமே ஒழிய சர்க்கரை குறைவாக இருக்கும் நபர்கள் நெல்லிக்காயை தொடவே கூடாது. 

சீதோஷ்ண நிலை அதிகமாகக் கொண்ட உடல் அமைப்பினர் நெல்லிக்காயை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். நெல்லிக்காய் மிகவும் குளிர்ச்சி வாய்ந்தது. எனவே அடிக்கடி சளி பிடிப்பவர்கள் இதை எடுத்துக் கொள்வதால் உங்கள் சளி குணமாவதை இது தடுக்கக்கூடும். 

சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் நெல்லிக்காய் சாப்பிட கூடாது. ஏனென்றால் இது ரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவை அதிகரிக்கும். எனவே சிறுநீரகம் வடிகட்ட மிகவும் சிரமப்படும். இதன் மூலம் சிறுநீரகம் செயல் இழக்கும் அபாயம் இருக்கிறது. 

அறுவை சிகிச்சை செய்யப் போகிறவர்கள் நெல்லிக்கனியை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே நெல்லிக்காயை சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தவிர நெல்லிக்கனியை எடுத்துக் கொண்டால், ரத்த நாளங்கள் சிதைந்து அறுவை சிகிச்சையின் போது ரத்தக்கசிவு ஏற்படக்கூடும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Donot use gooseberry these Type of peoples


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->