”எங்களின் சின்னதாய் தீபாவே, தமிழகத்தை காக்க தலைமை ஏற்க வா”!

”எங்களின் சின்னதாய் தீபாவே, தமிழகத்தை காக்க தலைமை ஏற்க வா”!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்மாவின் வழியில் கட்சியியை சின்னம்மா வழிநடத்தி செல்வார் என்று நிர்வாகிகள் தங்கள் விசுவாசத்தை தெரிவித்திருக்கிறார்கள். மேலும் அதிமுக பொதுச்செயலாளராக வரும் 2017 ஜனவரி 2 ஆம் தேதி பதவியேற்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சசிகலாவிற்கு ஆதரவாக பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.அதேபோல, பல்வேறு பகுதிகளில் சசிகலாவுக்கு எதிராக தொண்டர்கள் ஆங்காங்கே தங்களது எதிர்ப்பை தெரிவிப்பதோடு மறந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவுக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், பழனி கோதைமங்கலம் உள்பட பல இடங்களில் ஜெ.யின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் அதிமுகவினர் சசிகலாவுக்குவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டள்ள போஸ்டர்கள், பேனர்கள் கிழிக்கப்படுகின்றன.இந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த கனிபாலு என்பவர் ஜெ.யின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்களை திண்டுக்கல், கொடைக்கானல், வத்தலகுண்டு உள்ளிட்ட இடங்களில் ஒட்டியிருந்தார். சசிகலாவுக்கு சின்னம்மா என்ற பெயர் கொடுக்கப்பட்டிருப்பது போல, இந்த போஸ்டரில் தீபாவிற்கு சின்னத்தாய் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அதில் நிதியை நீதி வென்றது -நேற்று, நீதியை நிதி வென்றது -இன்று சின்னத்தாய் தீபாவே தமிழகத்தை தலைமை ஏற்க தகுதியானவர் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளன.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media