இங்கு இருப்பேன் என நினைக்கவில்லை... பா.ஜ.கவில் இணைந்த நடிகர் உருக்கம்! - Seithipunal
Seithipunal


தொலைக்காட்சி நெறியாளரும் நடிகருமான சேகர் சுமன் இன்று பா.ஜ.கவில் இணைந்தார். டெல்லி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் சேகர் பா.ஜ.கவில் இணைந்தார். 

அதன் பிறகு பேசிய அவர், பா.ஜ.க அலுவலகத்தில் அமர்ந்திருப்பேன் என நேற்று வரை நான் நினைக்கவில்லை. வாழ்க்கையில் பல்வேறு விஷயங்கள் நடக்கின்றன. 

சில நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியாது. நேர்மறையான எண்ணத்தில் பாஜகவில் இணைந்துள்ளேன். என்னை வழிநடத்தி அழைத்து வந்த கடவுளுக்கு நன்றி. 

நாட்டின் நலன் குறித்த சிந்தனை மட்டுமே உள்ளது. பகவான் ராமர் என்ன போதித்தாரோ அதன்படி நடக்கிறேன். நான் எதையாவது செய்து விட்டு பேச வேண்டும் என நினைக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor Shekhar Suman joined BJP 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->