76 வருடங்களுக்கு பின்னர் உச்சபட்ச வெப்பம் பதிவு - இந்திய வானிலை ஆய்வு மையம்.! - Seithipunal
Seithipunal


கோடைகாலம் என்றாலே அனல் பொறுக்க முடியாத அளவு வீசும். ஆனால், கோடைகாலம் தொடங்காத இந்த வருடத்தில் ஏப்ரல் மாதம் முன்னதாகவே வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. நேற்றைய நாளில் இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் பகுதியில் எடுக்கப்பட்ட அளவுகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 

இந்த ஆய்வின் முடிவுகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அளவின் படி 104.18 டிகிரி பாரன்ஹீட் (40.1 டிகிரி செல்ஸியஸ்) என்று வெப்பநிலை அளவு பதிவாகியுள்ளது. 

இந்த வெப்பநிலையளவு இயல்பான வெப்பநிலையை விட மிகவும் அதிகமாகும். இதுமட்டுமல்லாது அப்பகுதி அனல் காற்றும் பயங்கரமாக வீசியது. இது குறித்து வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கையில், " கடந்த 1945 ஆம் வருடம் மார்ச் 31 ஆம் தேதி டெல்லியில் 104.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து 76 வருடங்களுக்கு பிறகு தற்போது 104 டிகிரி அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது " என்று தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

After 76 Years High Temperature Affected in Delhi IMD Says 30 March 2021


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->