அப்படி போடு.! சன்னலோரம் திருட வந்தவரை அப்படியே 15.கி.மீ தொங்கவிட்டு இழுத்துச்சென்று போலீசில் ஒப்படைப்பு.! #வீடீயோ.! - Seithipunal
Seithipunal


ரயிலில் பயணம் செய்த போது திருட முயன்ற நபரை அப்படியே பிடித்து 15 கிலோமீட்டர் ஜன்னல் ஓரம் தொங்கவிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 

பொதுவாக, நாம் ரயில் மற்றும் பேருந்துகளில் நீண்ட நேரம் பயணிக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்று போலீஸ் மற்றும் அரசு அவ்வப்போது அறிவுறுத்தி வரும். பலரும் பிட்பாக்கெட் மற்றும் வழிப்பறி உள்ளிட்டவைகளில் சிக்குவது வழக்கம். 

அதிலும் ரயிலில் பயணிக்கும் போது மொபைல் போனை சார்ஜ் போட்டு இருந்தாலோ அல்லது ஜன்னல் ஓரமாக கைப்பை ஏதாவது வைத்து இருந்தாலோ வெளியில் இருந்து அப்படியே திருடுவதை பலர் வழக்கமாக வைத்திருப்பார்கள். இதைத் தாண்டி நண்பர்களை போல பழகி மயக்க பிஸ்கட்டுகள் மற்றும் ஸ்னாக்ஸ்களை கொடுத்து நம்மை மயக்கம் அடைய செய்து அப்படியே நம்மிடம் இருக்கும் பொருட்களை திருடிக் கொண்டு செல்லும் கும்பலும் இருக்கின்றன.

சமீபத்தில் இது போல மயக்க பிஸ்கட்டுகள் கொடுத்து ஒரு வட மாநில வாலிபர் செல்போன், பணம் உள்ளிட்டவற்றை திருடிய சம்பவம் திருப்பூரில் நடைபெற்றது. இத்தகைய சூழலில், பீகார் மாநிலத்தில் பீகார் பெகுசராயில், ரயில் பயணி ஒருவரின் செல்போனை பறிக்க முயற்சித்த திருடனை, அப்படியே பிடித்து 15 கி.மீ. தூரம் வரை ஜன்னலில் தொங்கவிட்டு, இழுத்துச்சென்று போலீசில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்த வீடீயோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bihar train theft caught by passenger and hanging for 15 kms


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->