சிகிச்சைக்காக சென்ற 16 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் திருட்டு.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் 15 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த ஜனவரி 21ம் தேதி 16 வயது சிறுமி உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஜனவரி 24ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன் பின்னர் ஜனவரி 26 ஆம் தேதி சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் உடலை வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதன் பின்னர் குடும்பத்தினருக்கு சிறுமியின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டதாக சந்தேகத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுமியின் உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

body parts of a 16-year-old girl went for treatment were stolen


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->