விமானநிலையத்திற்கு துப்பாக்கி குண்டுடன் சென்ற ஆசிரியர்.. வினோத தண்டனை அளித்த நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


துப்பாக்கி குண்டை விமானநிலையத்திற்கு எடுத்து சென்ற ஆசிரியருக்கு வினோத தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு ஆசிரியர் ஒருவர் சென்ற போது அவரை பரிசோதித்த பாதுகாப்பு படையில் அவரிடம் இருந்து துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து, அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், தன் மீது பதிவான எப்.ஐ.ஆரை நீக்க கோரி அவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர்2008-09-ம்  ஆண்டில் உத்தரகாண்டின் சமோலி நகரில் பள்ளியில் படித்து கொண்டிருந்தபோது, சாலையில் கிடந்த துப்பாக்கி குண்டை எடுத்து என்னிடமே வைத்து கொண்டேன். அதனை எந்த உள்நோக்கமும் இல்லாமல் தவறுதலாக விமாநிலயத்திற்கு எடுத்து சென்றதாக கூறினர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர் மீது இருந்த எப்.ஐ.ஆரை நீக்கியது.

விமானநிலையத்தில் காவல்துறையினரின் நேரம் வீணடிக்கப்பட்டதால் ஆசியருக்கு தண்டனையாக அவர் சமூக பணி ஒன்றை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி, படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு பணி நாளின்போதும் கூடுதலாக ஆசிரியர் 2 மணிநேரம் வகுப்புகளை ஒரு மாதத்திற்கு எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்து.    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Court gave a Punishment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->