தெலுங்கானாவில் கிரேன் கம்பி அறுந்து விழுந்து விபத்து.. 5 தொழிலாளர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


தெலங்கானாவின் நாகர்குர்னூல் மாவட்டத்தில் கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ரெகுமானா கடா பகுதியில் பாலமுரு - ரங்காரெட்டி இடையே நீர் பாசன திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. 100 அடி ஆழமுள்ள சுரங்கப்பாதையில் கிரேன் உதவியுடன் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு வழக்கம் போல் பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென கிரேன் கம்பி அறுந்து  விழுந்தது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் குறித்து கொல்லப்பூர் காவல்துறையினர் தெரிவிக்கையில், இந்த விபத்தில் சிக்கியவர்கள் 100 மீட்டர் ஆழத்தில் காயங்களுடன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அவர்கள் உடனடியாக அங்குள்ள உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். ஆனால் அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர். மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Crane rope broke in Telungana 5 people death


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->