''I.N.D.I'' கூட்டணி தலைவர்கள் திடீர் டெல்லி பயணம்! இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 14 ஆம் தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று கட்ட வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருந்தது. 

இதற்கிடையே தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்கு சதவீத விவரங்களில் குளறுபடி உள்ளதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 'இந்தியா' கூட்டணி தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்நிலையில் 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் நாளை டெல்லி சென்று இந்திய தேர்தல் ஆணையரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். 

இந்த சந்திப்பில், வாக்கு பதிவு சதவீதம் குறித்த விவரங்களை முறையாக வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட உள்ளது. மேலும் தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.கவினர் மத விவரங்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்திடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் முறையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India alliance leaders travel Delhi tomorrow


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->