ஜூலை 20ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. மாநில அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கன்வர் யாத்திரை என்ற யாத்திரை நடைபெறும். அந்த யாத்திரையின் போது கண்வரியாக்கள் ஹரித்வார் , கௌ முக் மற்றும் உத்தரகாண்டில் உள்ள கங்கோத்திரி, பீகாரில் உள்ள சுல்தான் கஞ்சி ஆகிய பகுதிகளுக்கு கங்கை நதியின் புனித நீரை எடுத்துச் செல்வது வழக்கம்.

அதன் பிறகு அந்த நீரை வைத்து சிவபெருமானை வழிபடுவார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்த யாத்திரை நடைபெறாமல் இருந்தது.

இந்த யாத்திரையின் போது வாள்கள், திரிசூலங்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது 2 ஆண்டுகளுக்கும் பிறகு இந்த யாத்திரை நடைபெற இருப்பதால் 5 கோடிக்கும் அதிகமான யாத்திரிகர்கள் கண் பரிகாத்திரையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் கண்பர் யாத்திரை கடந்த ஜூலை 14ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட 15 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரைநடைபெற உள்ளதால் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை வருகின்ற ஜூலை 20ம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

July 20 to 26 school holiday for udhrakhand


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->