பெண்கள் படுக்கையை பகிர்ந்தால் தான் அரசுவேலை - கர்நாடக முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு..! - Seithipunal
Seithipunal


பெண்கள் படுக்கையை பகிர்ந்தால் மட்டுமே அரசு வேலை கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் சர்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

கர்நாடக மாநிலம், கல்புர்கியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே  செய்தியாளர்களைச் சந்தித்தார். தற்போது கர்நாடகாவில் பாஜக அரசு நடைபெற்று வருகிறது. அதனால், அரசு வேலைக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். மந்திரியாக இருந்த ஈசுவரப்பா 40 சதவீத கமிஷனை கேட்டதால் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அரசு வேலை கிடைக்க வேண்டும் என்றால் பெண்கள் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவதாக பிரதமர் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். அவரின் இந்த சர்ச்சைக் கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Ex minister Statement about government jobs


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->