தமிழகத்திற்கு நோ... தெலுங்கானாவிற்கு எஸ்... பரபரப்பு கிளப்பிய குஷ்பு! கரணம் என்ன? - Seithipunal
Seithipunal


பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலின் போது பா.ஜ.க கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கினார். 

வேலூரில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் ஆதரித்து குஷ்பு பிரசாதம் செய்து கொண்டிருந்த போது அவர் திடீரென பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். 

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பூ பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து செகந்திராபாத் தொகுதியில் குஷ்பூ பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரை காண உள்ளூர் தலைவர்களுடன் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர். 

அப்போது திறந்த வேனில் நின்றபடி நடிகை குஷ்பூ பேசிக்கொண்டிருந்தார். தெலுங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதியிலும் பா.ஜ.க தனித்து போட்டியிடுகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிகை குஷ்பு நடித்து பிரபலமாகியுள்ளார். இதனால் குஷ்புவை பாஜக மேலிடம் பிரசார களத்தில் இறக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் தமிழகத்தில் பிரசாரத்திற்கு மறுப்பு தெரிவித்த குஷ்பு தெலுங்கானாவில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kushboo campaign Telangana


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->