பி.சி.ஆர் வைத்து மிரட்டல், பாலியல் தொல்லை, மன அழுத்தம்.. வனத்துறை பெண் அதிகாரி தற்கொலை விவகாரத்தில் பேரதிர்ச்சி திருப்பம்.! - Seithipunal
Seithipunal


லேடி சிங்கம் என்று அழைக்கப்பட்ட வனத்துறை அதிகாரி தீபாளி சவான் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், புலிகள் காப்பக அதிகாரி எம்.எஸ் ரெட்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அமராவதி மாவட்டத்தில் வன அதிகாரியாக பணியாற்றி வந்தவர் தீபாளி சவான். இவரை வனத்துறையின் லேடி சிங்கம் என்று மகாராஷ்டிர மாநிலத்தில் அழைப்பார்கள். இவர் அங்குள்ள ரவுடிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பயப்படாமல் வனத்தை காக்கும் பணியில் புலி போல தீபாளி செயல்பட்டு வந்துள்ளார். 

புல்லட்டில் தனியாக சென்று மரத்தை வெட்டுபவர்களை விரட்டிய கதைகளும் இருக்கிறது. இப்படியான தைரியமான பெண்மணி தற்கொலை செய்தது பெரும் சோகமாக அமைந்துள்ளது. வனச்சரகத்தில் துணை அதிகாரியாக பணியாற்றி வந்த வினோத் சிவகுமார் என்பவர், தீபாளிக்கு பல வகைகளில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

மேலும், அடிக்கடி மது குடித்துவிட்டு கெட்ட வார்த்தைகளால் திட்டி வந்த நிலையில், அவரை பணி செய்யவிடாமல் மனதளவில் தொந்தரவு செய்துள்ளார். பாலியல் ரீதியாகவும் துன்புறுத்திய நிலையில், ஒரு மாத சம்பளத்தையும் நிறுத்தி வைத்துள்ளார். 

கடந்த மாதம் 27 ஆம் தேதி அமராவதியில் வசித்து வந்த தீபாளி சவாண் குடியிருப்பிலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மிகவும் தைரியமான வனத்துறை அதிகாரியாக பார்க்கப்பட்ட 28 வயது அதிகாரி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தற்கொலை கடிதத்தில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து அவர் பல தகவல் தெரிவித்து இருந்தார். மாதத்திற்கு ஒருமுறை கூட குடும்பத்தினரை சந்திக்க விடவில்லை என்றும், இரவு நேரத்தில் தனியாக சந்திக்க வருமாறு சிவகுமார் அழைக்கிறார் என்றும், உள்ளூர்வாசிகள் மரத்தை வெட்டியதை எதிர்த்ததற்கு எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை சட்டத்தை வைத்து தன்னை மிரட்டியது தொடர்பாக சிவகுமாரிடம் கூறிய சமயத்தில், அவர் தன்னை அந்த வழக்கில் கைதாகவைத்து சிறைக்கு அனுப்பி வைப்பேன் என்று மிரட்டியுள்ளார். 

இது தொடர்பாக சீனிவாசனிடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை என்றும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூருக்கு தப்பிக்க முயன்ற வனத்துறை துணை அதிகாரி வினோத்குமார் கைது செய்யப்பட்ட நிலையில், புலிகள் காப்பகத்தின் பீல்டு அதிகாரி சீனிவாச ரெட்டி தலைமறைவாக இருக்கிறார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lady Singham Dipali Chavan Suicide Issue Shocking Mystery Revolved


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->