ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுமி.. 5 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுமி மீட்பு..! - Seithipunal
Seithipunal


ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுமியை மீட்புபடையினர் மீட்டனர்.

குஜராத் மாநிலம், சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள கஜன்வாவ் கிராமத்தில் மனிஷா என்ற சிறுமி வசித்து வருகிறார். இன்று காலை அவர்500 முதல் 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதனை அடுத்து, அந்த பகுதிமக்கள் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த மீட்பு படையினர் முதலில் சிறுமிக்கு ஆக்சிஜன் சப்ளை வழங்கினர். அதன்பின்னர், சிறுமியின் உடல்நிலை கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. சுமார் ஐந்து மணிநேர போராட்டத்திற்குப் பிறகு60 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுமியை உள்ளூர் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் இராணுவ வீரர்கள் மீட்டனர்.

அதன்பின், சிகிச்சைக்காக சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Military mans rescue the girl child


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->