இது தான் திருமண பரிசு தொகுப்பா? நூதன பரிசளிக்கும் ஒடிசா அரசு..! - Seithipunal
Seithipunal


பொதுவாக திருமணம் பரிசாக வீட்டு உபயோக பொருட்கள் அல்லது அவர்களுக்கு தேவையான பொருட்களை கொடுப்போம். அரசு திருமண பரிசுகளில் பெரும்பாலும், பணம், நகை , உடை போன்றவை இருக்கும். ஆனால், ஒடிசா மாநில அரசுநூதன பரிசு தொகுப்பு ஒன்று வழங்க முடிவு செய்துள்ளது. அது என்ன தொகுப்பு என பார்போம்.

ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் கட்சியின் முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது அவர்கள் தரும் பரிசு தொகுப்பில் கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள், குடும்ப கட்டுப்பாட்டு முறைகளையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடும் கைப்புத்தகம், திருமண பதிவு சான்றிதழ் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கவுள்ளது.

இதுகுறித்து குடும்ப கட்டுப்பாடு இயக்குனர் பிஜய் கூறுகையில், இது தேசிய சுகாதார திட்டத்தின் அங்கம். இதன் நோக்கம்  குடும்ப கட்டுபாடு மற்றும் ஒரு குழந்தைக்கும், அடுத்த குழந்தைக்கும் எவ்வளவு காலம் இடைவெளி விடுவது
 என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். திருமணம் நடைபெறும் இடங்களிலேயே தம்பதியினருக்கு இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டிலேயே முதல் முறையாக இது போன்ற பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisa Marriage Gifts


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->