தெலுங்கானா || சிலிண்டரில் மோடி படம் வைத்து விளம்பரம்... இணையத்தில் வைரலாகும் வீடியோ..! - Seithipunal
Seithipunal


பாஜக மக்களவை தொகுதிகளில் சுற்றுபயணம் மேற்கொள்ள திட்டமிட்டது. அதன்படி, தெலுங்கானா மாநிலம் ஜகீராபாத் மக்களவை தொகுதியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது காமாரெட்டி மாவட்டம் பிர்குர் என்ற இடத்தில் ஒரு ரேஷன் கடைக்கு சென்ற அவர் அங்கு பிரதமரின் புகைப்படம் இல்லாததை கண்டு அங்கிருந்த ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார்.

சந்தையில் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யும் ரேஷன் கடையில் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யபடுவதற்குமத்திய அரசின் பங்கு எவ்வளவு தெரியுமா? மாநில அரசின் பங்கு என்னவேன தெரியுமா? என தொடர்ந்து கேள்வி எழுப்பினார். அதற்கு பின் அவறே பதிலையும் கூறினார். அதில், மத்திய அரசு 35 ரூபாய் அரிசியில் சுமார் 30 ரூபாயை மத்திய அரசும், 4 ரூபாயை மாநில அரசும் ஏற்றுக்கொள்கின்றன என அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.

மேலும், எங்கள் கட்சியின் பிரதமர் படத்தை வைப்பார்கள் எனவும் அதனை அகற்றாமல் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கிடையில் தெலுங்கானா ராஸ்த்ரா சமாதி கட்சியின் சிலிண்டரில் பிரதமரின் புகைப்படத்துடன் சிலிண்டர் விலை 1105 என விளம்பரம் செய்து வருகின்றனர்.நியாவிலை கடையில் பிரதமரின் புகைப்படம் இல்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நிலையில் பிரதமரின் படத்துடன் சிலிண்டர்கள் உள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Picture on Slinder gas cylinder


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->