மக்களவைத் தேர்தல்: அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ.!
PM Modi roadshow Ayodhya
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலையொட்டி அனைத்து அரசியல் தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்த வகையில் உத்தரபிரதேசம், அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளார். சமாஜ்வாதி கட்சியின் கோட்டையான எட்டாவாவிலும், மதியம் சீதாப்பூரிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவுக்குப் பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்தி செல்ல உள்ளார். இதற்காக அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.