இயற்கை விவசாயத்தில் மூக்கு மேல் விரல் வைக்க வைத்த 75 வயது முதியவர்.. வீடு முழுவதும் தோட்டம்.! - Seithipunal
Seithipunal


காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை இயற்கை முறையில் வீட்டு மாடியில் பத்து வருடங்களாக வளர்த்துவரும் மாடித்தோட்ட விவசாயி சாதனை புரிந்து இருக்கிறார். 

புதுச்சேரி - கடலூர் சாலையில் இருக்கும் நயினார் மண்டபம் வண்ணார் பகுதியை சேர்ந்தவர் புரூரவன். இவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவருக்கு வயது 75 ஆகும் நிலையில், இயற்கை விவசாயம் மூலமாக வீட்டுத்தோட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்து வந்துள்ளார். 

இதற்காக சொந்தமாக ஒரு இடம் வாங்கி வீட்டைக் கட்டி, வீட்டின் மொட்டை மாடியில் தோட்டம் ஆக்கியுள்ளார். வீட்டின் மொட்டை மாடி முழுவதையும் விவசாய நிலம் போலவே மாற்றியுள்ள நிலையில், கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, மிளகாய், முருங்கைக்காய், சாமந்திப்பூ, சீதாப் பழம், ஆப்பிள் பழம், செர்ரி பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை என பல்வேறு பழ, காய்கறி மற்றும் மலர் வகைகளை பயிரிட்டுள்ளார். 

இதனைப்போன்று வெற்றிலை, பீன்ஸ் போன்ற கொடி வகைகளையும் பயிரிட்டுள்ளார். இதுமட்டுமல்லாது அரிதான பத்துவகை கத்திரிக்காய்களும் இங்கு வளர்க்கப்படும் நிலையில், இவைகள் அனைத்தும் 100 விழுக்காடு இயற்கை உரங்கள் மூலமாக மட்டுமே வளர்க்கப்படுகிறது. 

புரூரவனின் கணவன் - மனைவி, இவர்களின் மூன்று மகன்கள், அவரது மனைவிகள், பேரப் பிள்ளைகள் என கூட்டுக் குடும்பமாக மாடி தோட்டத்தை பராமரித்து வருகின்றனர். புதுச்சேரி அரசின் வேளாண்துறை மலர் கண்காட்சியில் மாடித்தோட்ட பிரிவில் 6 முறை புரூரவன் பரிசு வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry Farmer Makes Organic Farming at Terrace garden


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->