ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்தியாவை பார்க்கும் விதம் மாறி உள்ளது - சுதந்திர தின பிரதமர் மோடி உரை.! - Seithipunal
Seithipunal


சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

அதன் பின்னர் அவர் விடுதலைப் போராட்டத்தை நினைவுகூர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவர் பேசியதாவது, இந்த சுதந்திர தினத்தில் அனைத்து இந்தியர்களுக்கும் மற்றும் இந்தியா மீது அன்பு கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 

ஒரு புதிய திசையில், ஒரு புதிய தீர்மானத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டிய தினம் இன்று. இந்த தினத்தில், கடமையை செய்யும் பணியில் தங்களது உயிரை ஈந்த மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பாபாசாகேப் அம்பேத்கார், வீர சாவர்க்கர் உள்ளிட்டவர்களுக்கு நாட்டின் குடிமக்கள் நன்றியுடையவர்களாக உள்ளனர்.

மேலும், ராணி லட்சுமிபாய், ஜல்காரி பாய், சென்னம்மா, பேகன் ஹஜ்ரத் மகால் போன்ற இந்திய பெண்களின் வலிமையை நினைவுகூரும்போது, இந்தியா பெருமையால் நிரம்பி வழிகிறது. பிரிட்டிஷ் அரசாட்சியின் அடித்தளத்தினை அசைத்த மங்கள் பாண்டே, தத்யா தோப், பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத், அஸ்வாகுல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் நம்முடைய எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு நாடு நன்றி செலுத்துகிறது. 

முன்னேறிய எந்த நாடாக இருந்தாலும் சரி, அந்த நாட்டின் குடிமக்களிடம் ஒழுக்கம் ஆழமாக பதிந்துள்ளது. அதேபோன்று மக்கள் அனைவரும் தங்கள் பொறுப்புகளை பின்பற்றினால் இந்தியா வேகமாக வளரும். 

குறிப்பாக இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களுக்கான மரியாதை என்பது முக்கிய தூண் ஆகும். ஆகவே நமது பெண்களின் சக்திக்கு ஆதரவு அளிக்க வேண்டும். உற்பத்தித் துறையில் இந்தியா வரலாறு படைத்து வருகிறது. கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் டிஜிட்டல் மூலம் புரட்சி ஏற்படும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Modi's 75th Independence Day Speech


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->