பைரவாவுக்கு வந்த புது சிக்கல்!

பைரவாவுக்கு வந்த புது சிக்கல்!

பைரவா திரைப்படம் ரிலீஸாகும் இடமெல்லாம் பாசிட்டிவ் எனர்ஜி தான் இருக்கிறது. எவ்வளவு பணமென்றாலும் கொடுத்து, தங்களது தியேட்டரில் பைரவா திரைப்படத்தைத் திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் காத்துக்கொண்டிருக்க, கேரளாவில் மட்டும் விஜய் படத்தை வாங்குவதற்கு யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இது விஜய்யின் மார்கெட் பற்றிய சந்தேகத்தால் அல்ல. கேரள திரையரங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் லாபத்தில் பங்குபிரிக்கும் பிரச்னையால் ஏற்பட்டுள்ள தயக்கம். கேரளாவில் விஜய்யின் மார்கெட் பற்றி அறிய 25 ஆண்டில் விஜய் சம்பாதித்தது என்ன?

முன்பெல்லாம் கேரளாவில் அதிக படங்கள் வெளிவராது, அவை அதிக நாட்களும் தியேட்டரில் இருக்காது. ஆனால், இப்போது நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது. 100 நாட்களைத் தாண்டி ஓடும் படங்கள் சீரான இடைவெளியில் வெளியாகிவருகின்றன. ஆனால், இதன் லாபமெல்லாம் படத்தை உருவாக்கக் காரணமாக இருந்த தயாரிப்பாளருக்குச் செல்லாமல் தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும் மட்டுமானதாக மாறிவிட்டது.

இதனால், இரு தரப்புக்கும் ஏற்பட்ட பஞ்சாயத்தில் சுமூக முடிவு எடுக்கப்படாததால் இப்போது விஜய் படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் யோசிக்கின்றனர். பிரச்னைகளை மீறி விஜய் படத்தை திரையிடுவது என்றால், கேரள தயாரிப்பாளர்கள் சங்கம் சொல்லும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின் திரையிட்டுக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டிருப்பதால், நெருக்கடியான நிலையில் தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகிஸ்தர்களும் இருக்கின்றனர்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media