‘ஜெயலலிதா ஒரு கருநாகம்’ பஜனை கோஷ்டி லீடர் பொன்னையனின் அதிரடி பேச்சு! தூசு தட்டிய வலைதள வாசிகள்

‘ஜெயலலிதா ஒரு கருநாகம்’ பஜனை கோஷ்டி லீடர் பொன்னையனின் அதிரடி பேச்சு! தூசு தட்டிய வலைதள வாசிகள்

சினிமாவில் செல்லாக்காசாகி அரசியலுக்கு வந்தவர் ஜெயலலிதா என ஜானகி முகாமிலிருந்த வளர்மதி அப்போது போட்டு தாக்கியது தற்போது அவரது அரசியல் எதிரிகளால் அந்த கால பேப்பர் கட்டிங்குகளாக வெளியிடப்பட்டன.

இந்நிலையில் ஜானகி அணியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த பொன்னையனும் கடந்த 15 ஆண்டுகளாக ‘அம்மா அம்மா’ என்று உருகிய பொன்னையனும் ஜெயலலிதாவை வாய்க்கு வந்தபடி பேசி கன்னாபின்னாவென ஏசியுள்ள அந்தகால பத்திரிக்கை செய்திகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அதிமுக கட்சியில் இருப்பவர் பொன்னையன். 1980ம் ஆண்டு, தமிழகத்தின் முதல் அமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்த போது, அவரின் ஆட்சி மத்திய அரசால் கலைக்கப்பட்டது. அப்போது கட்சியில் எம்.ஜி.ஆருக்கு எதிராக ஜெயலலிதா செயல்பட்டு வந்தார் எனவும் கூறப்படுகிறது.

அந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பொன்னையன் ‘ஜெயலலிதா ஒரு கருநாகம். தனது வீட்டின் பால்கனியில் இருந்து யார் யாருக்கோ டாட்டா காட்டிய நாலாந்தர பெண்மணி’ என கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அதற்கு பின் அ.தி.மு.க.. ஜெ.வின் கைக்கு சென்றவுடன், பொன்னையன் ஜெ.வின் புகழை பாடினார் என்பது வேறு கதை.

இந்நிலையில், அப்போது செய்தி தாளில் வெளியான அந்த செய்தியைத்தான் சிலர் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

அ.தி.மு.க.., முன்னாள் அமைச்சர் வளர்மதி ‘சினிமாவில் செல்லாக்காசு ஆகி அரசியலுக்கு வந்த ஜெயலலிதா என்னை குறை கூறுவதா’ என பல வருடங்களுக்கு முன்பு பேசிய செய்தி சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து பொன்னையன் பேசியது தற்போது வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media