முதல்வருக்கு தீவிர சிகிச்சை! லண்டன் டாக்டரை வரவழைத்த போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளை விவேக்!

September 30, 2016 12:25 pm
முதல்வருக்கு தீவிர சிகிச்சை! லண்டன் டாக்டரை வரவழைத்த போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளை விவேக்!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 22 ஆம் தேதி இரவு 10:30 க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இரவோடு இரவாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

jaya-2

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதும், சர்க்கரை உள்ளிட்ட சில அடிப்படை டெஸ்ட்களை உடனடியாக செய்துவிட்டார்கள். அதன் அடிப்படையில்தான் அவருக்கு ஆரம்பகட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள் மருத்துவர்கள்.

ஆனால், முதல்வருக்கு நுரையீரல் சம்பந்தமான பிரச்னை இருப்பதால், அவரது ரத்தத்தில் மேலும் சில பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது. அந்த டெஸ்ட்கள் சென்னையில் செய்யும் வசதி இல்லை என்பதால் மும்பையில் உள்ள லேப்க்கு ஜெயலலிதாவின் ரத்த மாதிரியை எடுத்து விமானத்தில் அனுப்பப்பட்டது.

இதுவரை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் முதல்வர் ஜெயலாலிதாவை இன்று காலை லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் மருத்துவமனைக்கு வந்து தற்போது முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

முதல்வருக்கு நுரையீரல் தொற்று தொடர்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை குறைபாடு போன்றவை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. இருப்பினும், சில சிகிச்சை முறைகளுக்கு வெளிநாட்டு மருத்துவர்களின் உதவி தேவைப்பட்டது.

இதற்கான பணிகளில் சசிகலாவின் மன்னார்குடி உறவுகள் அதாவது, போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த இளவரசியின் மகன் விவேக் களத்தில் இறங்கின. நேரடியாக சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா என பயணித்தவர், மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையைக் கேட்டுள்ளனர். இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட்டின் பணிகள் குறித்து அறிந்துள்ளனர். அவரை அணுகி சென்னைக்கு வரவழைத்துள்ளனர்.

தீவிர சிகிக்சை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் முதல்வர் நலம் பெற்றுத் திரும்புவார் என மருத்துவமனை வட்டார தகவல் தெரிவிக்கிறது. அப்போலோ மருத்துவமனையின் செவிலியர்கள் ஒன்று திரண்டு முதல்வருக்காக சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media