செய்திபுனல்
இராகுகால கோடாங்கி வீடியோ
சமீபத்திய செய்தி
சோறு தண்ணி கொடுக்காமல் என்னை வீட்டில் அடைத்து வைத்துள்ளார்கள் : சத்தியபாமா யூனிவர்சிட்டி நிறுவனர் ஜேபிஆரின் மகள் கண்ணீர் பேட்டி!|            |தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்.. தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்.. மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..!|            |வங்கியுடன் ஆதார் இணைந்துள்ளதா..? நாட்டின் அடையாளமே ஆட்டம் காண்கிறது... ஆதாரை அக்குவேர் ஆணிவேராக கிழித்து தொங்க விட்ட அமெரிக்க பத்திரிக்கை..!|            |தொடர்ந்து ரஜினியை சீண்டும் சுப்பிரமணியன் சாமி..கொந்தளிக்கும் ரசிகர்கள் : பாஜக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.,|            |வேற வழியே இல்லை... தமிழகத்தையே உலுக்க போகும் பெரிய லெவல் ரெய்டு... அந்த ஒரு மேட்டரில் சிக்கி சின்னா பின்னமாகப்போகும் ரஜினி..!

சசிகலாவிடம் ஓ.கே வாங்கிய பின் தீபா பேட்டி ஒளிபரப்பு! இது என்ன பொழப்பு பாண்டே? நார் நாராய் கிழிக்கும் வலைதளவாசிகள்…

சசிகலாவிடம் ஓ.கே வாங்கிய பின்  தீபா பேட்டி ஒளிபரப்பு! இது என்ன பொழப்பு பாண்டே? நார் நாராய் கிழிக்கும் வலைதளவாசிகள்…

முன்னாள் முதல்வர் மறைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பிலிருந்தே சசிகலாவிற்கு சாதகமான விவாதங்களை மட்டும் தான் தந்தி டிவி செய்தது, அவர் இறந்த பிறகு நேரடியாக சசிகலாவிற்கு சாதகமாக அணைத்து விஷயங்களும் செய்தது தந்தி டிவி நடுநிலையாளர்கள் நம்பிக்கையை தந்தி டிவி இழந்து விட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பேட்டி16ம் தேதி இரவு காணத்தவறாதீர்கள் என தந்தி டி.வி.,யில் அதற்கு முன் சில நாட்களாக விளம்பரங்கள் வந்தது. சசிகலாவிற்கு நேரடி எதிரியாக வளர்ந்து வரும் இந்த தீபா பேட்டி தந்தி டி.வி.,ஒளிபரப்பினால் அரசியல் மாற்றம் ஏற்படும் என அ.தி.மு.க.,தொண்டர்களும், பொதுமக்களும் எதிர்பார்த்தனர். ஆனால், சொன்னபடி, தந்தி டி.வி.,யில் நேற்று முன்தினம் தீபா பேட்டி ஒளிபரப்பு செய்யவில்லை. அதற்கு பதிலாக அ.தி.மு.க.,அமைச்சர் ஒருவரின் பேட்டி இடம் பெற்றது.

பார்த்துக் கொண்டிருந்த தமிழக மக்கள் ஷாக் ஆனார்கள். என்ன காரணம் என்று புரியவில்லை இது பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.,தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து சமூக வலைதளங்களில் தீபா பேட்டி ரத்து குறித்து பல்வேறு கருத்துகள் வந்த வண்ணமுள்ளது. ஜெ.,உடல் அடக்கம் செய்த மறுநாள் காலையில் முதல் ஆளாக சசிகலாவை சந்தித்து தனது ஆதரவை வெளிப்படுத்தியவர் தந்தி குழும உரிமையாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். இதற்குள் முகநூல் போராளிகள் பொங்கித் தீர்த்தனர். பாண்டேவை கழுவிக் கழுவி ஊற்றினார்கள். சசிகலா மிரட்டியதால் தான் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது என்று கிண்டல் அடித்தார்கள். மக்களின் கண்டனத்திற்கு ஆளான, அந்த செய்தி நிறுவனம் பயந்து விட்டது. பெயர் கெட்டுவிடும். அரசியலுக்கு பயந்து ஒளிபரப்பவில்லை என்று பேசுவார்கள்.

தந்தி உரிமையாளருக்கும் சசிகலாவுக்கு இப்படி நெருக்கம் இருக்கும் போது எப்படி தீபா போட்டி வெளியாகும்? தந்தி டி.வி.,சசி.,யிடம் விலை போய் விட்டது என பலரும் தங்கள் எதிர்ப்பை வளைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையில், தீபா பேட்டியை ஒளிபரப்ப நிர்வாகம் தடையாக இருந்தால் தனது வேலையை ராஜினமா செய்யபோவதாக பாண்டே கூறியதாக தகவல் வெளியானது.

இப்போது இன்னொரு ரகசியமும் கசிந்துள்ளது. அதாவது தீபாவின் பேட்டி மொத்தமும் வேண்டும் என்று ‘அந்த’ சிதம்பர தெய்வம் கேட்டுள்ளது நிறுவனமும் மொத்த புட்டேஜையும் கொடுத்து அனுப்பியதாம். அதை முழுமையாக போட்டுப் பார்த்த தோட்டம் அங்கேயே தங்களின் டிவி நிருவனத்தில் இருந்து எடிட்டர் குழுவை வரவைத்து தீபாவின் பேட்டியை எடிட் செய்தார்களாம்.

அதன் பின் போனால் போகிறது என்று மீதி கொஞ்சம் பேட்டியை கொடுத்தார்களாம். அதன் பின்தான் ரங்கராஜ் பண்டேவிற்கு உசுரே வந்ததாம். அதை நேற்று ஒளிபரப்பினார்கள். ஆனால், உற்றுப்பார்த்தால் ஆங்காங்கு ஓட்டை தெரிகிறது. முகநூல் போராளிகள் அதற்கும் கிண்டல் அடித்தார்கள். மீண்டும் ஒளிபரப்பு… இதெல்லாம் ஒரு பொழப்பா? என சமூக வலைதளங்களில் பாண்டேவை கிழித்து வருகின்றனர்.

தீபாவின் இந்த முழுமையான பேட்டியை ஒளிபரப்பு செய்யாததை கண்டித்து சமூகவலைதளவாசிகளின் கருத்துக்கள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்;

எல்லோர் மனதிலும் எழும் கேள்விகள்..

75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அவரை பார்க்க ஏன் யாரையும் அனுமதிக்க வில்லை..

ராஜாஜி ஹாலில் ஏன் அவ்வளவு இட நெருக்கடியை ஏற்படுத்தி இவர்கள் மட்டும் சூழ்ந்துக்கொண்டிருந்தார்கள்?..

ஆயிரம் மனஸ்தாபங்கள் இருந்திருந்தாலும் அவர் மறைவுக்கு பிறகு அவரின் உறவினர்களை அழைத்து சடங்குகளை செய்ய வைத்திருந்தால் தமிழகமே பாராட்டியிருக்குமே…!

நடுநிலையாக கேள்விகளை கேட்பதை விட்டுவிட்டு, ஒரு கையில் வெண்ணை இன்னொரு கைல விளக்கெண்ணை’னு கேட்கும் விதம்.. யோசிக்க வைக்கிறது.. இதே இடத்தில சசி இருந்தால், இப்படி பட்ட நகையாடகூடிய கேள்விகள் வருமா என்று..

“உங்களப்பத்தின நியூஸ் எதுவுமே உங்க அத்தைக்கு தெரியக்கூடாதுன்னு தடுத்துட வாய்ப்பிருக்குன்னு நினைக்கிறீங்களா? ”

அவங்க அத்தை எப்படி செத்தாங்கங்கிறதையே யாருக்கும் தெரியாம மறைக்க முடியறப்ப, அவங்க அத்தைய 75 நாட்கள் அப்பல்லோவில் வைத்துக்கொண்டு நாடகமாடி தமிழக மக்கள் கண்ணிலும், தொண்டர்கள் காதிலும் பூசுற்றிய மன்னார்குடி கும்பலுக்கு தீபாவை போட்டுக்கொடுப்பது, ஜெயலலிதாவை ஏமாற்றுவது பெரிய விஷயமா?.. சப்ப மேட்டர்… , மிஸ்டர். பாண்டே

தீபா தான் ஜென்டிலா என்னுடய தகவல்களை தவறாக சித்தரித்து திரித்து சொல்கிறார்கள்.என்றும் தீபா திறமைசாலி வளந்து விட்டால் நமக்கு ஆபத்தென்று தெரிந்து தான் குருவி மிட்டாய் சாப்பிடுகிற தீபக்கை மடக்கி வைத்திருக்கிறார்கள். மன்னார்குடா மாஃபியா கும்பல்.

சரியாக கேட்டீர்கள்.. பாண்டே கேள்விகள் அனைத்தும் சசிகலாவின் (சின்னம்மா)சாதகமாக தானே உள்ளது.. அனைத்து கேள்விகளுக்கும் அசராமல் பதில் சொல்லும் திறமை தீபாவிடம் இருக்கிறது… அடுத்த கேள்விக்கு என்ன (திரானி இருந்தால்) சசிகலா அம்மையாரிடம் நடத்த முடியுமா???

பாசப்போராட்டம் வேசம்போட்டவர்களின் சூழ்ச்சியால் தடுக்கப்பட்டிருக்கிறது….எத்தனை வலிகள் எத்தனை வேதனைகள்…. மிகவும் கஷ்டபடுத்தியிருக்கிறார்கள் சகோதரி தீபா அவர்களை…. அவர்ககளின் வேதனைகளுக்கு மருந்து இனி வெற்றிதான்… வாழ்க வளமுடன் சகோதரி தீபா…. ஒளிபரப்பிய தந்தி டிவிக்கும்… ஆசிரியர் திரு. ரெங்கராஜ் பான்டே அவர்களுக்கும் நன்றிகள்….

அப்படியே ஜெயலலிதா அம்மா போன்ற தெளிவான பேச்சு அவரை போன்றே கம்பீர குரல், அம்மா அவர்கள் விட்டு சென்ற கழகத்தையும் ஆட்சியை காப்பாற்ற வேண்டிய தகுதியும் திறமையும் தீபா ஒருவருக்கே உள்ளது கழகத்தின் ஒன்டரை கோடி தொன்டர்களும் சின்னம்மா தீபா அவர்கள் வரவேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.

தீபாவும் பத்திரிகையாளர் தான் தெற்காசியாவில் நடைபெறும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆய்வுகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்… அதிமுக வை வழி நடத்தும் தகுதி நிச்சயம் தீபா அவர்களுக்கும் உள்ளது. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் தமிழகத்தில் மிக முக்கிய அரசியல் சக்தியாக நிச்சயம் வருவார், அப்போது கேட்க வேண்டிய கேள்விகளையும் இப்போதே தயார் செய்து கொள்ளுங்கள். கீதையில் கிருஷ்ணன் கூறியபடி ” சூழ்ச்சி செய்து , துரோகத்தால் ஒருவரை வீழ்த்தி, அவர் இடத்தை நீ பிடிக்கும் போது ஒன்றை மட்டும் நினைவில் கொள், நீயும் அதே துரோகத்தால்தான் வீழ்த்தப்படுவாய்”….

பாண்டே ரெடியய்டீங்க அடுத்து சசிகலாவின் கண்ணீர் பேட்டி… கேள்விகள் கேட்டகும் வேலை தங்களுக்கு மிச்சம்… தீபா கேட்டதைவைத்தே ஓட்டிடுவீங்க.. மடக்கி மடக்கி கேள்வி கேட்கும் வேலையில் இருந்து விடுதலை கொடுத்து விட்டது அதிமுக… விளம்பர இடைவேலையில் glycerin ரெடியாய் வச்சுக்கோங்க.. நடராஜன்ட நல்லா டியூசன் எடுக்க சொல்லுங்க சசி அத்தைக்கும் திபக்கிற்கும் அடுத்த தீபக் தானே… பாவம் பாத்து கேளுங்க அரசியல்வாதிகள் சமாளிப்பார்கள்… இல்ல ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு இடைவேளை கொடுத்து எடிட்டிங்ள சரி பண்ணிடுங்க பாண்டே… எப்படி இப்படி உங்கள் identity தொலைக்க ரெடியாகுறீங்கனு புரியவே இல்லை… பாண்டே ஒரே கேள்வியை திரும்ப திரும்ப வேறு வடிவத்தில் மாற்றி மாற்றி கேட்ட ஒரே பேட்டி இது தான்… ஆனா தங்களால் திபாவை அசைக்க முடியவில்வை… அத்தையை போன்றே அமைதியாக… நிதானமாக… பொருமையாக… நடிப்பு இல்லாத மனதில் உள்ளதை உண்மையாக பேசிய தீபாவிற்கு வாழ்த்துக்கள்..

தந்தி டிவி முடிந்தால், நடுநிலையானவர்கள் என்று நிரூபிக்க விரும்பினால், சசிகலா ஏன் இப்படி மௌனமாக இருக்கிறார். இவளோ பெரிய சர்ச்சைகள் இருந்தும், கட்சியின் பொது செயலாளர்.. தமிழகத்தின் முதல்வராவதை தவிர, என்ன நடந்தது என்று அவர் வாயால் கூற முன் வராதது ஏன்? எப்போது வாயை திறப்பார் என்று கேளுங்கள் பார்க்கலாம்..

நடுநிலையாக கேள்விகளை கேட்பதை விட்டுவிட்டு, ஒரு கையில் வெண்ணை இன்னொரு கைல விளக்கெண்ணை’னு கேட்கும் விதம்.. யோசிக்க வைக்கிறது.. இதே இடத்தில சசி இருந்தால், இப்படி பட்ட நகையாடகூடிய கேள்விகள் வருமா என்று..

70 நாட்கள் அப்பலோவில் தீபக்கை அனுமதித்த சசிகலா…
1 நாள் கூட தீபாவை அனுமதிக்காத்து ஏன் என்பதை இதே போல் பாண்டே சசிகலாவை வைத்து நேர்காணல் நடத்தி நமக்கெல்லாம் விளக்குவார் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறோம்.

தந்தி டீவியின் கேள்விக்கு என்ன பதில்? என்ற விவாதத்தில் தீபா அவர்கள் எந்தவித முகசுளிப்பும் இல்லாமல் தனது உணர்ச்சிகளை வெளிகாட்டாமல் கேட்கப் பட்ட கேள்விகளை அழகாக உள்வாங்கி இந்த நேரத்தில் ஏன் இப்படி பல கேள்விகளை திரு பாண்டே அவர்கள் மூலம் கேட்கிறார்கள் அதன் பதில் யாரை காயப்படுத்தும் அத்தை உயிருடன் இருந்தபோதே தனது நிலைமை எவ்வாறு இருந்தது தற்போதைய தனது நிலைமை எப்படி உள்ளது தனக்கெதிராக யாரிடம் எப்படி பவர் உள்ளது என அழகாக மெச்சுரிட்டியாக பதில் கூறி உண்மைகளை வெளியில் சொல்ல ஒரு காலம் வரும் என்ற நிலையை உணர்ந்து கொடுக்கப்பட்ட அழகான பேட்டி! முகத்தில் உண்மையை கூறுகிறோம் என்ற தெளிவு!

இதே போல் ஒரு பேட்டியை சசிகலாவிடம் தீபா இப்படி கூறியுள்ளாரே என தந்தி டீவியில் ஒரு நேரடி நிகழ்ச்சியாக திரு பாண்டேவால் நடத்தமுடியுமா? பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷ்ரப் அந்நாட்டில் தேடப்படும் ஒருவரை பேட்டியெடுக்க முடிந்த உங்களால், மற்றும்
சுப்பிரமணிய சுவாமியை ஏன் மோடியையே பேட்டி காண முடிந்த தந்தி டீவி சசிகலாவிடம் அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் தொடர்பு எப்படி வந்தது? ஏன் இடையில் உங்களை வெளியே போகச்சொன்னார்? எதனால் வளர்ப்பு மகன் என்ற மிக பிரம்மாண்டமாக தமிழகமே வியக்கும் கல்யாணம் நடத்தப்பட்டது? ஏன் பின்னர் வளர்ப்பு மகனே இல்லை என்று மறுத்தார்? உங்களை போயஸ் தோட்டத்திலேயே தோழியாக வைத்துக்கொண்ட ஜெயலலிதா நடராஜனை மட்டும் தன் கடைசி மூச்சு உள்ளவரை ஏன் உள்ளே விடவில்லை? உங்கள் சொந்தங்களை தோட்டத்தில் உள்ளேயே வைத்துக்கொண்ட ஜெயலலிதா ஏன் தனது அண்ணன் மகளை மட்டும் உள்ளே வரக்கூட விடவில்லை? என பல கேள்விகளை கேட்கமுடியுமா?

தீபா கிட்ட இத்தன கேள்வி கேட்ட பாண்டே சசிகலா கிட்ட இரண்டே கேள்வி கேள் ஏன் தீபாவ பாக்க அனுமதிக்கல ? நீயும் ரெட்டியும் அந்த வீடியோ புட்டேஐ மக்களுக்கு ஏன் காமிக்கள தலைமை செய்தியாளர் உண்மையான நபரா இருந்தால்.

தீபாவின் நேர்காணல்….

திரு பாண்டேவின் நோக்கம் தீபா,ஜே விர்க்குமான உறவினை விட அவர்களுக்கான இடைவெளியை பெரிதுபடுத்துவதாகவே 97% இருந்தது. இப்படி பட்ட அணுகு முறையை செல்வி ஜே அவர்கள் உயிருடன் இருக்கும்போது இவ்வுரையாடல் நடைபெற்று இருந்தால் 1% கூட இருந்த்திருக்காது என்பது நாடரியும்.

இது ஒருபுறம் இருந்தாலும் ஜே அவர்கள் ஒருகட்டத்தில் “மக்களால் நான் மக்களுக்காக நான்” என அழுத்தமாக முழங்க ஆரம்பித்தார் அப்படி முழங்க ஆரம்பித்த காலமும் தீபாவை விலகி இருந்த காலமும் ஒறுமித்தே உள்ளது. எனவே தனக்கு எக்காரணம் கொண்டும் ஒரு குடும்ப பிண்ணனி இருக்கிறது என காட்ட விரும்பி இருக்கமாட்டார். மேலும் குடும்ப அரசியலை சாடுவதான் தளத்தில் வாக்குகளை பெற்றதும் ஒரு காரணம். மேலும் ஒரு பெண்ணாக அரசியலில் அவர்பட்ட கஷ்டம் காரணமாக அது தணை சார்ந்த உறவு க்கு வேண்டாம் எனவும் எண்ணியிருக்கலாம். தான் சார்ந்த வழக்குகள் வலயத்தில் வரவேண்டாம் எனவும் நினைத்திருக்கலாம். ஏற்கனவே அவர் சிரை சென்ற காலத்தில் தீபாவின் பெயர் அரசியல் தளத்தில் உலவியதை கண்டு தீபாவை சற்று இடைவெளி யில் வைத்திருந்திருக்கலாம் இப்படி பல காரணங்கள் உள்ளன. மேலும் அவர் உடல் நிலை திடீரென்று பாதிக்கப்பட்டு மருத்துவமனை சென்று பிறகு மார்அடைப்பின் காரணமாக இறந்த்தாக கூறப்படுகிறது. இடைபட்ட காலகட்டத்தில் தீபாவை பார்க்க அனுமதி வழங்க படவில்லை ஒரு வேளை வாய்ப்பு கிடைத்து இருந்தால் இன்று நிலமை வேறுபட்டு இருந்திருக்கலாம். மேலும் தனது, அரசியல் வாரிசாக யாரயும் அறிவிக்கவில்லை ஜே, இப்படி பட்ட சூழலில் ஜே இறப்பின் காலகட்டம் வரயில் தீபா உடனிருந்திருந்தால் அதிகாரமையத்திற்கு செல்லும் வழி அவருக்கு அருகில் இருந்திருக்கும். எனவே அவர் அந்த இடத்தில் இல்லாதது அடுத்தவருக்கு இலகுவாக உள்ளது போல தெரிகிறது.

முதலில் பாண்டேவுக்கு நன்றி அம்மாவைபோல இனி பேச இந்த கட்சியில் ஆள் இல்லாமல் போய்விடுமோ என்ற எண்ணம் பலரிடம் இருந்து அதை தீபா வழியில் அடையாளம் கண்டு அனைவருக்கும் தெளிவுபடுத்தியதற்கு மகிழ்ச்சி… பாண்டே சார்… உங்கள் நேர்கானலில் சமநிலை இல்லாமல் பாரபட்சம் மிகவும் தெரிந்து ஒருவேளை வலபோய்விட்டீர்களோ என்ற சந்தேகம் பார்வையாளர்கள் பலருக்கு எழும்பியது… அதுபோகட்டும் இதேபோல் இன்னொரு நிகழ்ச்சியை உங்களால் கூட்டமுடியுமா.? இதே தீபா , பாண்டே, சசிகலா உங்கள் மூவரையும் மேடை ஏற்றி என்னைபோன்ற நடுநிலைபார்வையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல தைரியம் இருக்கா பாண்டே சார்….தயவுசெய்து பத்திரிகை தர்மத்தை காப்பாற்றமுடியாவிட்டாலும் பரவாயில்லை சாகடித்து விடாதீர்கள்…

பாண்டே அவர்கள் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளும் யாரோ கேட்க சொன்ன கேள்வி என்று வெளிச்சமாக தெரிந்தது. துரோகிகளின் நடுவில் அம்மா அவர்கள் இவ்வளவு நாள் போராடி வாழ்ந்தது போல், தீபா அவர்கள் அசராமல் பதிலளித்தது அம்மாவின் ஆன்மா பிரதிபலிப்பு.

பணம், பதவி, ஆதாயம் தேடுபவன் அனைவரும் துரோகி சசிகலாவிற்கு அடிமையாகி விட்டார்கள்.

பாண்டே தீபாவிடம் வியாபார டிஆர்பி நோக்கில் கேட்கும் ஒரு கேள்வியையாவது ஒங்க சென்னாமிவிடம் கேட்க வேண்டியதுதானே. அத்தைக்கும் இந்த சொத்தைக்கும் இடையில் யார் இருந்தாங்கன்னு அங்க அங்க கேப்பியா. மாக்கான் ஒரு கேள்வி ஒரே கேள்வி சென்னம்மாவிடம் கேள். முதல்வருடன் 25 வருடங்கள் கூட இருந்தவரை நீ ஏன் பேட்டி காணவில்லை.

பாண்டே சார்….தயவுசெய்து பத்திரிகை தர்மத்தை காப்பாற்றமுடியாவிட்டாலும் பரவாயில்லை சாகடித்து விடாதீர்கள்…

App

சமீபத்திய செய்தி

சோறு தண்ணி கொடுக்காமல் என்னை வீட்டில் அடைத்து வ
தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும
வங்கியுடன் ஆதார் இணைந்துள்ளதா..? நாட்டின் அடையா
தொடர்ந்து ரஜினியை சீண்டும் சுப்பிரமணியன் சாமி..
வேற வழியே இல்லை… தமிழகத்தையே உலுக்க போகும
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஜூலை 11-ல்
வங்கி லாக்கர்களில் கொள்ளை போனால் வாடிக்கையாளரே
அ.தி.மு.கவுக்கு வேறு வழியே இல்லை : பொன்னார் பளி
டேங்கர் லாரி விபத்து : பெட்ரோல் பிடிக்க சென்ற 1
அரளி விதையும் சைவம் தானே, நீங்க சாப்பிடுவீங்களா
பாலம் திறப்புவிழாவில் சசிகலா,தினகரன் பேனர் : அத
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு எடப்பாடி அரசு கவிழும
இளைஞர்களின் போராட்டம் வீண் தானா..? ராணுவத்தை கொ
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருக்கும் பரோல் வழங்கி
“கேப்டன் பதவிக்கு நீ லாயக்கு இல்லை”

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media