திமுகவிற்கு எதிர்காலம் இல்லை, ”இனி வாளும் – கேடயமாய் நின்று அதிமுகவுக்கு பயன்படுவார் சின்னம்மா” ஸ்லீப்பர் செல் கி.வீரமணி

December 28, 2016 7:21 am
திமுகவிற்கு எதிர்காலம் இல்லை, ”இனி வாளும் – கேடயமாய் நின்று அதிமுகவுக்கு பயன்படுவார் சின்னம்மா” ஸ்லீப்பர் செல் கி.வீரமணி

ஜெயலலிதாவுக்குப் பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் ஆகும் முயற்சியில் இருக்கும் சசிகலாவை அதிமுக கட்சியின் மூத்த, முக்கிய நிர்வாகிகளும் கட்சியின் கீழ் மட்ட நிர்வாகிகளும் ஆதரித்து வருகின்றனர்.

ஆனால், அதிமுக கட்சி அல்லாத ஆனால் அதிமுக ஆதரவாளர்களாக அறியப்பட்ட பல தலைவர்கள் சசிகலா தலைமையை ஆதரித்திருந்தாலும், அதிமுக சார்பற்ற தலைவர் ஒருவர் சசிகலா பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்று கோரிக்கை வைப்பது இதுவே முதன் முறை. அந்த வகையில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணியின் அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்;

சசிகலா கடந்த பல ஆண்டுகளாக வெற்றி – தோல்விகளில் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா எப்படிப்பட்ட வியூகங்களை வகுத்தார்; எந்தெந்த அஸ்திரங்களை எவ்வப்போது, யார் யார் மீது ஏவினார் என்பதை எல்லாம் நீக்கமற அவருடன் இருந்து புரிந்தவர் மட்டுமல்ல; அச்செயல் வடிவம் எடுக்கப் பெரும் பங்காற்றியவர் சசிகலா என்பதை எவரே மறுக்க முடியும்?. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான திமுக மிகுந்த முதிர்ச்சியுடன் – குறுக்கு வழிகளில் எதற்கும் ஆசைப்படாமல், கண்ணியத்துடன் அரசியல் நடத்துவது பாராட்டுக்குரியது.

மறைந்த ஜெயலலிதாவை அறிந்தவர், அளந்தவர் – அவருடன் பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து பக்குவப்பட்டவர் என்ற கனிந்த நிலையில் முதிர்ச்சியுடன் உள்ள ஒருவர், அதிமுகவின் சோதனையான இந்த காலகட்டத்தில் சசிகலாவை தேர்வு செய்வது, அடுத்தடுத்து வரவிருக்கும் சோதனைகளை எல்லாம் சந்திக்கும் சித்தத்துடன் இருக்க ஒரே வழி – தடுமாற்றமோ, குழப்பமோ உங்களுக்கு இல்லை; உருவாக்க முயலும் இனப் பகைவர்களை, அரசியல் எதிரிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் அடையாளம் கண்டு நடந்துகொள்வதுதான் முக்கியம்.

சசிகலா இதுவரை கேடயமாய்ப் பயன்பட்டவர்; இனி வாளும் – கேடயமாய் நின்று அந்த இயக்கத்திற்குப் பயன்படுவார் என்பது நம் இனமானக் கண்ணோட்டம். போகப்போக இது மற்றவர்களுக்குப் புரியும்.

இயற்கை நடப்புகளை எப்போதும் எதிர்கொள்ளப் போதிய பக்குவமும் அவரிடத்தில் அபரிமிதமாய் உண்டு என்பதை இனிதான் அகிலம் காணும் வாய்ப்பு ஏற்படும் – வாய்ப்பே தராமல் எவரையும் மதிப்பிடலாமா?. நமக்குத் தனிப்பட்ட எந்த அபிமானமும் இல்லை; இந்தக் காலகட்டத்தில் தாய்க் கழகம் ஆற்றவேண்டிய கடமை இது

இந்த உலகமகா தத்துவத்துக்கு தந்தை பெரியாரையும் துணைக்கழைத்து ‘‘இந்நாட்டில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை; அரசியல் பெயரில் – போர்வைக்குள் நடைபெற்றவை அத்துணையும் ஆரிய – திராவிட இனப் போராட்டமே’’ என்று நீட்டி முழக்கியுள்ளார். கூடவே, ‘திராவிடர் இயக்கங்களின் தாய்க்கழகம் என்ற உரிமையோடும், உறவோடும் கூறுகிறோம்’ என்றும் கூறியுள்ளார் கி. வீரமணி.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media