மணிரத்னம் படம் பற்றி கரன் ஜோஹார் புதிர்..!

மணிரத்னம் படம் பற்றி கரன் ஜோஹார் புதிர்..!

கரன் ஜோஹார் ட்வீட் செய்திருப்பதாக மொபைல் குயில் கூவியது. என்ன தான் ட்வீட் செய்திருக்கிறார்? எனப் பார்ப்பதற்காக ஓப்பன் செய்தால்… மணிரத்னம், கரன் ஜோஹார், ஏ.ஆர்.ரஹ்மான், குல்சர், ஷாத் அலி ஆகிய பெயர்கள் இடம்பெற்ற ஒரு படத்தைப் பதிவு செய்து இந்தியில் ஏதோ எழுதியிருந்தார்.

Figure Out என்பது மட்டும் புரிந்தது. மேலே சொன்ன பெயர்களுக்குப் பின்னணியில் ஒரு பெண்ணை புல்லட்டில் ஏற்றிக்கொண்டு பாலத்தில் செல்லும் இளைஞனின் படம் தெரிந்தது. மணிரத்னம்-புல்லட் என்றதும் ஓகே கண்மணி படத்தின் போஸ்டரில் என்ன கண்டுபிடிக்கச் சொல்கிறார்? என்று யோசித்துக்கொண்டே பாலிவுட் மீடியா பக்கம் நோட்டம்விட்டதும் அங்கு பெரிய விவாதமே நடைபெற்றுக்கொண்டிருந்தது.

மணிரத்னமும் கரன் ஜோஹாரும் சமீபத்தில் இணைந்தது ஓகே கண்மணி திரைப்படத்தின் இந்திய் ரீமேக்கான ஓகே ஜானு திரைப்படத்துக்காகத்தான். அந்தப் படத்தின் இசையமப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.ஷாத் அலி தற்போது ஒரே ஒரு படம் மட்டும் தான் இயக்கிக்கொண்டிருக்கிறார்.

அது ஓகே கண்மணியின் ரீமேக் ஓகே ஜானு. ஷாத் அலியின் ஆஸ்தான பாடலாசிரியர் குல்சர் தான். இந்த ஃபோட்டோவை, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவும், ஷ்ரதா கபூரும் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

எனவே இந்த ஃபோட்டோ ஓகே ஜானு திரைப்படத்தைச் சேர்ந்தது என்று ஒருவருக்கொருவர் ஹை-ஃபை கொடுத்துக்கொள்கிறார்கள்.

இதைத்தான் நாளைக்குள் கண்டுபிடிக்கச் சொல்லி கரன் ஜோஹார் இந்தியில் எழுதியிருந்தார் போல.

இந்தி தெரியாமல் இருப்பதற்கு இப்படியெல்லாம் பிரச்னை வருமென்று கனவிலாவது தோன்றியிருக்கலாம். நாளை ஓகே ஜானு திரைப்படத்தின் போஸ்டர்/டீஸர் ரிலீஸ் என்பது தான் இவர்கள் சொல்லும் சங்கதி.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media