அழகிய ஆலிவ் பச்சை ஆடைகளை அணிந்து கரீனா கபூர் ரேம்ப் வாக்

அழகிய ஆலிவ் பச்சை ஆடைகளை அணிந்து கரீனா கபூர் ரேம்ப் வாக்

மும்பை: மும்பையில், ‘லேக்மே’ அழகு சாதனப்பொருட்கள் நிறுவனத்தின் சார்பில், ‘லேக்மே ஃபேஷன் வீக்’ நடந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, இறுதி நாளன்று ‘கரீனா கபூர்’ ரேம்ப் வாக் நடந்து வந்தார். அந்த ஆடை, அரச குடும்பத்துப்பெண் அணிவதுபோல் வடிவமைக்கப்பட்டிருந்தது.

KArrna Kapoor

மேலும், லேக்மே நிறுவனத்தின் விளம்பர தூதராக இருக்கும் கரீனா, பிரபல ஆடை வடிவமைப்பாளர் சபியா சச்சி வடிவமைத்த எம்பிராய்டரி செய்யப்பட்ட அழகிய ஆலிவ் பச்சை ஆடைகளை அணிந்து ரேம்ப் வாக் நடந்து பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

Kareena

இதுகுறித்து கரீனா கபூர், “இந்த ஃபேஷன் வீக்கில் பங்கேற்றது மிகவும் மறக்கமுடியாத ஒன்று. ஏனெனில், இங்கு நான் மட்டும் ‘ரேம்ப் வாக்’ நடந்து வரவில்லை. என்னுடைய கருவில் வளரும் குழந்தையும் பங்கேற்றுள்ளது. முதன்முறையாக நானும் எனது குழந்தையும் என இரண்டு பேரும் சேர்ந்து ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. இந்த நேரம் மிகச் சிறப்பானது. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media