செய்திபுனல்
இராகுகால கோடாங்கி வீடியோ
சமீபத்திய செய்தி
சோறு தண்ணி கொடுக்காமல் என்னை வீட்டில் அடைத்து வைத்துள்ளார்கள் : சத்தியபாமா யூனிவர்சிட்டி நிறுவனர் ஜேபிஆரின் மகள் கண்ணீர் பேட்டி!|            |தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்.. தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்.. மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..!|            |வங்கியுடன் ஆதார் இணைந்துள்ளதா..? நாட்டின் அடையாளமே ஆட்டம் காண்கிறது... ஆதாரை அக்குவேர் ஆணிவேராக கிழித்து தொங்க விட்ட அமெரிக்க பத்திரிக்கை..!|            |தொடர்ந்து ரஜினியை சீண்டும் சுப்பிரமணியன் சாமி..கொந்தளிக்கும் ரசிகர்கள் : பாஜக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.,|            |வேற வழியே இல்லை... தமிழகத்தையே உலுக்க போகும் பெரிய லெவல் ரெய்டு... அந்த ஒரு மேட்டரில் சிக்கி சின்னா பின்னமாகப்போகும் ரஜினி..!

‘காஷ்மோரா’வை சிறுவர்களால் தனியாகப் பார்க்க முடியாது! வேறு வழியே இல்லை குடும்பத்தோட பார்த்தே ஆக வேண்டும்…

‘காஷ்மோரா’வை சிறுவர்களால் தனியாகப் பார்க்க முடியாது!  வேறு வழியே இல்லை குடும்பத்தோட பார்த்தே ஆக வேண்டும்…

கோகுலிடமிருந்து, ‘காஷ்மோரா’ மாதிரியான படைப்பை கோலிவுட் எதிர்பார்க்கவில்லை. ஏன், நடிகர் கார்த்தியே இந்த மாதிரி ஒரு கதையை கோகுலிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என பேட்டிகளில் கூறிவருகிறார். அந்தளவுக்கு அமானுஷ்யங்களும் டைம் டிராவல் ஆகியவையும் நிரம்பியிருக்கிறது காஷ்மோரா திரைப்படத்தில். தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களில் காஷ்மோராவுக்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ஆனாலும் இந்தத் திரைப்படத்தை சிறுவர்களால் தனியாகப் பார்க்க முடியாது. சமீபத்தில், சென்சார் முடிந்த காஷ்மோரா திரைப்படத்துக்கு சென்சார் குழு U/A சர்டிஃபிகேட் வழங்கியிருக்கிறது.

kaashmora-1

மிகுந்த பொருட்செலவில் தயாராகியிருக்கும் இப்படம்   பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது. இந்த படத்துக்கான ஸ்பெஷல் கிராபிக்ஸ் காட்சிகள் எந்த வெளி நாட்டிலும் செய்யாமல் இந்தயாவிலே செய்தது குறிப்பிடத்தக்கது. காஷ்மோராவில் ‘பிளாக் மேஜிக்’ அதாவது பில்லி சூனியம் செய்யும் வித்தைக்காரராக கார்த்தி நடிக்கிறார்.

வருகிற 28ஆம் தேதி தீபாவளிக்கு வர இருக்கும் இந்த படத்தினை திரையில் காணுவதற்கான முக்கிய காரணங்கள் ;

கார்த்தி முதன்முறையாக அரசர் கால கதையில் தோன்றுகிறார். மேலும் ட்ரைலரில் காட்டப்பட்ட கார்த்தியின் லுக் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இயக்குனர் கோகுலின் முதல் படத்திற்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத வகையில் உருவாகி உள்ள இந்த படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ‘ படத்தின் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.

kashmora-2

ஸ்ரீதிவ்யாவை அதிகம் நடமாடவிடவில்லை. அநேகமாக அவர்தான் கதையை மாற்றக்கூடியவராக இருக்கவேண்டும்.

இரண்டு கார்த்தியில் ஒருவர் இந்த நூற்றாண்டில் வாழும் மந்திரவாதி அதாவது பேய் ஓட்டுபவர். இன்னொரு கார்த்தி, வரலாற்றின் ஏதோ ஒரு பகுதியில் கட்டப்பா கெட்-அப்பில் வாழ்ந்த ஒரு நபர். இந்த இரு கார்த்திகளையும் மாற்றி மாற்றி சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி போர்க் காட்சிகளால் டிரெய்லரிலேயே சிலிர்க்கவைத்துவிட்டார். மேலும், இந்த படத்தில் ‘பிளாக் மேஜிக்’ அதாவது பில்லி சூனியம் செய்யும் வித்தைக்காரராக கார்த்தி நடிக்கிறார். படத்தின் இடைவேளை வரை தற்போதைய காலத்து கதையும், இடைவேளைக்குப் பின்னர் அரசர் காலத்து கதையும் படத்தில் இடம் பெற்றுள்ளதாம்.

பெரும்பாலான பாடல்களை சந்தோஷ் நாராயணின் குரலே ஒலித்தாலும் இசையில் அதிரடி காட்டியிருக்கிறார். வரலாற்றுப் படங்களுக்கு இப்படித்தான் என்றிருந்த பேட்டர்னை ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திலேயே ஜி.வி.பிரகாஷ்குமார் உடைத்துவிட்டதால், பீரியட் ஃபிலிமில் மாடர்ன் இசை என்ற பெயர் சந்தோஷ் நாராயணனுக்குக் கிடைக்கவில்லை. மற்றபடி, தகிட தகிடதை தாராரோ என்ற குரலும், கிட்டாரின் கிர்ர்ர் என்ற ஒலியும் பாய்ச்சும் எனர்ஜி லெவல் வேறலெவல்.

kashmora-4

காஷ்மோரா’ திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் மிக அதிக திரையரங்குகளில் வெளியாகும் கார்த்தி படம் என்ற பெருமையை பெறுகிறது. கார்த்தி படங்களுக்கு தெலுங்கு மாநிலங்களிலும், உலகம் முழுவதும் தெலுங்கு பேசும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பு இருப்பதால் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் 1700 திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த எண்ணிக்கை சமீபத்தில் வெளியான அஜித், விஜய் படங்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

kashmora

தெலுங்கு பதிப்புக்கு ‘ரத்ன மஹா தேவி’ என்று பெயர் வைத்துள்ளனர். கார்த்தி மற்றும் நயன்தாராவுக்கு தெலுங்கில் நல்ல மார்கெட் உள்ளதால், இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் பல கிராபிக்ஸ் காட்சிகளுடன் தமிழில் நம் அனைவரையும் மிரட்ட வருகிறது காஷ்மோரா. இப்படத்தின் டிரைலர் அனைவரின் பாராட்டையும் பெற்றதுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.

kaashmora-2

கார்த்தி மூன்று வேடங்களில், ஒரு வேடத்திற்காக Face Scanning டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், கார்த்தியின் இந்த கேரக்டர் திரையில் பார்க்கும்போது ஆச்சர்யத்தையும் பிரமிப்பையும் வரவழைக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர், மேலும், இப்படத்தில் அரை மணி நேரமே தோன்றும் வரலாற்று பிளாஷ்பேக்காக ’17 செட்கள், 130 நாட்கள், 360 டிகிரி கேமரா , ‘மாற்றான்’, ‘பேன்’ ‘எந்திரன்’ படங்களுக்கு பின் Face Scanning டெக்னாலஜி,  90 நிமிட கிராபிக்ஸ்’ என்று எல்லாமே கஷ்மோராவில் ஸ்பெஷல்.

தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் அதிக பட்ஜெட்டில் வெளியாகும் படம் இது. மேலும், இந்த தீபாவளிக்கு 2 பெரிய படங்கள் மட்டுமே வெளியாவதால் வேறு வழி இல்லை இந்த படத்தை பார்த்து தான் ஆக வேண்டும்.

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ், விவேக், சித்தார்த் விபின், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை கோகுல் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.

App

சமீபத்திய செய்தி

சோறு தண்ணி கொடுக்காமல் என்னை வீட்டில் அடைத்து வ
தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும
வங்கியுடன் ஆதார் இணைந்துள்ளதா..? நாட்டின் அடையா
தொடர்ந்து ரஜினியை சீண்டும் சுப்பிரமணியன் சாமி..
வேற வழியே இல்லை… தமிழகத்தையே உலுக்க போகும
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஜூலை 11-ல்
வங்கி லாக்கர்களில் கொள்ளை போனால் வாடிக்கையாளரே
அ.தி.மு.கவுக்கு வேறு வழியே இல்லை : பொன்னார் பளி
டேங்கர் லாரி விபத்து : பெட்ரோல் பிடிக்க சென்ற 1
அரளி விதையும் சைவம் தானே, நீங்க சாப்பிடுவீங்களா
பாலம் திறப்புவிழாவில் சசிகலா,தினகரன் பேனர் : அத
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு எடப்பாடி அரசு கவிழும
இளைஞர்களின் போராட்டம் வீண் தானா..? ராணுவத்தை கொ
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருக்கும் பரோல் வழங்கி
“கேப்டன் பதவிக்கு நீ லாயக்கு இல்லை”

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media