மிரட்டும் திரைக்கதை! அழகு, கம்பீரம்..! மகாதேவி நயன்தாரா மிருகத்தனமான நடிப்பு கார்த்தி ‘ காஷ்மோரா’,

மிரட்டும் திரைக்கதை! அழகு, கம்பீரம்..! மகாதேவி நயன்தாரா  மிருகத்தனமான நடிப்பு கார்த்தி ‘ காஷ்மோரா’,

தமிழ்சினிமாவை பொருத்தவரை ஒரு வித்தியாசமான கதை வந்தால் போதும் அதை வைத்து இந்த நெட்டிசன்கள் கலாய்த்து தல்ல ஆரம்பித்து விடுவார்கள். இவர்களின் பிடியில் இருந்து தப்பித்த ஒரே படம் பாகுபலி மட்டும் தான். காஷ்மோராவும் பீரியட் பிலிம் தான், ஆனால் பாகுபலியை மறந்து விட்டு இந்த படத்தை பாருங்க அப்படின்னு படக்குழு கேட்டுக் கொண்டதால் அதை மறந்து விட்டு படத்தை பார்க்க ஆரம்பித்தோம் சரி கதை களத்தைப் பார்ப்போம்.

கார்த்தியின் வரலாற்றில் ஒரு பிரம்மாண்ட மையில் கல்லை ‘காஷ்மோரா’ படம் மூலம் எட்டி உள்ளார். அதற்கு அவர் இயக்குனர் கோகுல் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். மொட்டை கார்த்தி, ராஜ்நாத் ஆக அசூர முரட்டு தனத்தை காமித்து படை தளபதி கார்த்தி மிரட்டியயுள்ளார். இந்த கதையை ரெடி பண்ணதிற்கு கோகுலை பாராட்டி ஆக வேண்டும். படத்தில் இரண்டு கார்த்தி, ஒருவர் ராஜ்நாத் இன்னொருவர் காஷ்மோரா. ராஜ்நாத் கதை மன்னர் கால கதை. அதில் ராஜ்நாத் தான் வில்லன் பெண்மோகம் கொண்டவராக நடித்து உள்ளார். ஒரு அரசவையில் படை தளபதியாக இருப்பார் அந்த அரசவையின் இளவரசியான நயன்தாராவை மணம் முடித்து கொள்ள ஆசை பாடுவார். அதை நிறை வேர்த்தியும் கொள்வார் அதன் பொருட்டு நயன்தாரா கார்த்தியை கொன்றுவிடுவார். இது ஒரு கதை…

kashmora-2

அடுத்த கதை.., இதில் கார்த்தி காஷ்மோரா கதாபாத்திரத்தில் பேய் ஓட்டுபவராக வருகிறார். அதாவது பேய் ஓட்டுகிறேன் என்று மக்களை ஏமாத்தி பணம் சம்பாதிக்கும் இவர், ஒரு கட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ வீட்டிற்கு பேய் ஓட்ட வருகிறார். அவர் செய்யும் சில போர்ஜரி வேலையின் காரணமாக, யதார்த்தமாக அந்த எம்.எல்.ஏவிற்கு நல்லது நடக்கின்றது. பிறகு ஒரு கட்டத்தில் எம்.எல்.ஏ வீட்டில் ரைடு வர, காஷ்மோரா நம்பிக்கையான ஆள் அவர் வீட்டில் பணத்தை வைய்யுங்கள் என சொல்கிறார்.

kaashmora-3

அந்த நேரத்தில் ஒரு பங்களாவில் பேய் ஓட்ட சென்ற கார்த்தி அங்கு வசமாக மாட்ட, எம்.எல்.ஏவின் பணத்தை கார்த்தியின் அப்பா விவேக் சுருட்டிக்கொண்டு ஓட, அவரும் அந்த பங்களாவில் மாயமாக வந்து மாட்டுகிறார். இவர்கள் குடும்பம் ஏன் அந்த பங்களாவிற்கு வருகிறது, இவர்களை அழைத்து வந்த மாய சக்தி எது என்பது அடுத்தடுத்து காட்சிகளில் தெரிகிறது. பிறகு கார்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தினர் பங்களாவில் இருந்து வெளியே வந்தார்களா? என்பதே மீதிக்கதை.

கார்த்தி ஒன் மேன் ஷோவாக கலக்குகிறார், நயன்தாரா சில மணி நேரங்கள் வந்தாலும் மனதில் நிற்கும்படியான கதாபாத்திரம் விவேக்கின் ஒன் லைன் காமெடி காட்சிகள், சில போலி சாமியார்களின் உண்மையான முகத்தை திரையில் தைரியமாக காட்டியதற்காகவே பாராட்டலாம்.

kaashmora-7

கார்த்திக் காஷ்மோரா என்ற பெயரில் படத்தில் வருகின்றார், இவர் பொய்யாக பேயை ஒட்டும் தொழிலை செய்கின்றார் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றார் இவருக்கு அப்பாவாக விவேக் வருகின்றார் படம் ஆரம்பம் ஆன முதல் செம்ம ஹாரராக இருக்கும் ஆனால் கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் கார்த்தியின் வழக்கமான காமெடி பாணியில் பயணிக்கின்றார்.

கார்த்தி ஒன் மேன் ஷோவாக கலக்குகிறார், கார்த்தி பேய் ஓட்டுபவராக அசத்துகிறார், படத்தின் ஆரம்பக்காட்சிகளில் பயமுறுத்தும்படி அறிமுகமானாலும் அடுத்தடுத்து காட்சிகளில் தனக்கே உரிய கலகலப்பில் செம்ம ஸ்கோர் செய்கிறார். படத்தில் கார்த்திக் மூன்று வேடங்களில் வருகின்றார் ஒன்று காஷ்மோரா மற்றொன்று ராஜ் நாயக் மூன்றாவது வேடமாக தலையில்லாமல் நடிக்கின்றார். இந்த மூன்றாது வேடத்தை படம் ரிலீஸ் ஆகும் வரை படு ரகசியமாக வைத்திருந்தனர். இந்த கதாப்பாத்திரம் குழந்தைகளை கவர வைக்கப்படுள்ளது.

ரத்தின மகாதேவி என்ற பெயரில் 30 நிமிட நேரங்கள் வந்தாலும் மனதில் நிற்கும்படியான கதாபாத்திரம். நயந்தாரா உண்மையான ராணியாகவே படத்தில் வாழ்ந்துள்ளார், என்ன நடை என்ன ஸ்டைல்லு ரத்தின மகாதேவி ராணியாக நயன்தாரா அத்தனை அழகு கம்பீரம். இன்னும் 10 வருஷத்துக்கு இவங்க மார்க்கெட் இறங்காது போல , அந்த அளவுக்கு இவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குநர் கோகுல்.

kaashmora-4

விவேக் கார்த்தியின் அப்பாவாக வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பிற்கு முழு கேரண்டி, சூப்பர் சார். இதுவரை இவரை மிஸ் பண்ணிய அவரின் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு விருந்தாக அமையும், இவர் அடிக்கும் கவுண்டர் டயலாக் எல்லாம் திரையரங்கமே அதிர்ந்து போகின்றது. கிளைமேக்ஸில் வில்லனிடம் பணப்பெட்டியை கொடுக்கும் இடத்தில் அடிக்கும் கவுண்டர் அப்லாஸ் அள்ளுக்கின்றது… விவேக் இஸ் பேக்…

“ரௌத்திரம்”, “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா” ஆகிய படங்களை இயக்கிய கோகுலா இந்த படத்தை இயக்கியுள்ளார் எனற ஆச்சரியம் கண்டிப்பாக உங்களுக்கு படம் பார்க்கும் போது வரும். அந்த அளவுக்கு மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இந்த படத்தை இயக்கியுள்ளார். வாழ்த்துக்கள் கோகுல்…

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media