டபுள் மீனிங் ‘கவலை வேண்டாம்’ ரொம்ப ஹாட் மசாலா டயலாக் படம்!

டபுள் மீனிங் ‘கவலை வேண்டாம்’ ரொம்ப ஹாட் மசாலா டயலாக் படம்!

‘யாமிருக்க பயமேன்’ டி.கே இயக்கத்தில் ஜீவா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சுனைனா உள்ளிட்டோர் நடிக்க வெளிவந்திருக்கிறது ‘கவலை வேண்டாம்’,அரவிந்த் எனும் ஜீவாவும், திவ்யா எனும் காஜல் அகர்வாலும் சின்ன வயது முதலே நண்பர்கள் … ஒரு கட்டத்தில் காதலில் விழும் இருவரும் ரிஜிஸ்தர் மேரேஜ் செய்து கொண்டு வாழ்க்கையில் இணைகிறார்கள்.

இணைந்த இரண்டாவது நாளே கருத்து வேறுபாட்டால் பிரிகின்றனர். சில ஆண்டுகளில் இரண்டாவது திருமண ஏற்பாட்டில் டைவர்ஸ் கேட்டு ஜீவாவைத் தேடி வரும் காஜல், டைவர்ஸ் வேண்டுமென்றால் ஒரு வாரம், நாமிருவரும் ஒன்றாக வாழ வேண்டும். எனும் ஜீவாவின் கண்டீஷனுக்கு ஒப்புக் கொண்டு ஒரே வீட்டில் ஒன்றாக வாழ சம்மதிக்கிறார்.

அங்கு ஜீவாவின் நற்குணங்களை கண்டுணர்ந்து இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தனரா? அல்லது ஜீவா தன்னை ஒன்சைடாக’லவ்’ பண்ணும் தீபா எனும் சுனைனாவிற்கு டபுள் ஓகே சொன்னாரா? காஜல் தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள காத்திருக்கும் அர்ஜூன் – பாபி சிம்ஹாவிற்கு கழுத்து நீட்டினாரா…? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு காமெடியாகவும், காம நெடியாகவும் சற்றே வல்கராவும் விடை தந்திருக்கும் படம் தான் “கவலை வேண்டாம்”.

kavalai-vendaam

அரவிந்த்தாக ஜீவா அசால்ட்டாக தன் பாத்திரத்தை உணர்ந்து உள்வாங்கி நடித்திருக்கிறார். நக்கல் , நையாண்டி காட்சிகள் அவருக்கு கைவந்த கலை என்பதால் வெகு இயல்பாக நடித்திருப்பது படத்திற்கு பலம் சேர்க்கிறது.

திவ்யாவாக காஜல் அகர்வால் தனது திருதிரு துறு துறு நடிப்பால் படத்தை தூக்கி நிறுத்த முயற்சித்திருக்கிறார்.

பின்பாதி படத்தில் வரும் பாபி சிம்ஹா, “ஹாய் நான் திவ்யா ஹஸ்பெண்ட் “எனும் ஜீவாவிடம் “ஹை நான் , திவ்யாவை கட்டிக்கப் போற வன்” என தன் கரகர குரலால் என்ட்ரி கொடுத்து எக்ஸ்ஆர்டினரி பர்பாமெண்ட்ஸ் குடுக்கிறார். வாவ்.

தீபாவாக சுனைனா, திவ்யா _ காஜலுக்கு போட்டியாக நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

kavalai-vendam-3

நட்டி – நடராஜாகவரும் ஆர்.ஜே பாலாஜி ரொம்பஓவர்ஜி. அதிலும், பட்சாதாபத்தில் சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டி தர வரும் ஷில்பா-ஸ்ருதி ராமகிருஷ்ணனிடம் அவர் அம்மணமாய் பண்ண முயற்சிக்கும் கலாட்டாக்கள் ஓவரோ ஓவர்.

பாலசரவணன், மயில்சாமி, மனோபாலா, காஜலின் அம்மாவாக வரும் மாஜி நாயகி மந்த்ரா, தேவிப்பிரியா…உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். மாயா ஆன்ட்டியாக வரும் மறைந்த ஜோதிலட்சுமியும் கச்சிதம்.

சரளா விஜயகுமாரின் ஆடை வடிவமைப்பு அழகு வண்ணஅமைப்பு, சிறுத்தை கணேஷ், டான் அசோக்கின் சண்டை பயிற்சி தேவைக்கு ஏற்ற பயிற்சி, அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல், டி.எஸ் சுரேஷின் படத்தொகுப்பு பக்கா தொகுப்பு !

லியோன் ஜேம்ஸின் இசையில், “ஜன்னல் காத்து போலவே… “” உன் காதல் இருந்தா போதும்”, “நான் இருந்தால் உன்னோடு என் தேடல் தீருமடி நீ தொலைந்தாயோ” உள்ளிட்ட பாடல்களும் அவை படமாக்கப்பட்டிருக்கும் லொகேஷன்களும் பரவசம்.

டி.கேயின்எழுத்து இயக்கத்தில் “நான் அடிச்ச ஆணியில நீங்க என்னடா படம் மாட்டிக்கிட்டிருக்கீங்க?”, “எல்லா வடைக்கும் ஒரு காக்கா இருக்கும் போல….”,

“ஏம்மா ,டோர சரியா சாத்தலையா…பாவம் அவரு வந்து சாத்திட்டுப் போறாரு… ” , “குழாயில தண்ணி வரும் போதே பக்கெட்டை வச்சிடுன்னு சொல்றாங்கப்பா….”

என்பது உள்ளிட்ட காமெடி ,காம நெடி டயலாக்குகளும், நேபாளி பெண்ணை டாவடித்து, திருமணம் முடித்த பாலசரவணனுக்கு டைவர்ஸ் வழங்கப்படும் விதம்.

மனைவியை அபிநந்தனும் நானும் எனும் செக்ஸ் படத்துக்கு ஹீரோகூட்டிப்போ வதையும்….ஹீரோயினான மனைவியும், “என்னடா முட்டி கழண்டவன் மாதிரி பேசுற….எவன் ஒருத்தன் மேட்டு மேல சைக்கிள வேகமா ஓட்டுறானோ…அவன் அந்த விஷயத்துல செம ஸ்ட்ராங்கா இருப்பானாம்…” என்பதையும் தியேட்டருக்கு வரும் இளைஞர் பட்டாளம் ரசிக்கும்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media