சப்பாத்திக்கு என்ன சைடிஷ் செய்வதுனு யோசனையா? அப்போ ஆலு மசாலா செய்து கொடுங்கள்..! - Seithipunal
Seithipunal


சப்பாத்திக்கு எப்போதும் செய்யும் குருமா சில நேரங்களில் அவை சலித்து விடும். அதற்கு பதிலாக சப்பாத்திக்கு ஆலுமஷ்ரூம் செய்து கொடுத்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.

தேவையானவை:

மஷ்ரூம் - 200 கிராம்

உருளைக் கிழங்கு - 2

வெங்காயம் - 2

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 2

தயிர் - 2 மேசைக் கரண்டி

பூண்டு - 5 பற்கள்

இஞ்சி - 2 அங்குலம்

சீரகம் - 1 மேசைக்கரண்டி

காய்ந்த சிவப்பு மிளகாய் - 3

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

மஞ்சள் - 1/2 மேசைக் கரண்டி

மல்லித் தூள் - 1/2 மேசைக் கரண்டி

மிளகாய்த் தூள் - 1/2 மேசைக் கரண்டி

உப்பு - தேவையான லவு

எண்ணெய் - 2 மேசைக் கரண்டி

தண்ணீர் - 1/2 கப்

கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை :

உருளைக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கடாயில் போட்டு, நீர் வெளியேறும் வரை நன்றாக வதக்கி கொள்ளுங்கள். வெங்காயத்தை கொதிக்கவைத்து எடுத்து கொள்ளுங்கள். அதனை ஆறவைத்துபூண்டு ,சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய்  சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பெருங்காயம் சேர்த்து கொள்ளுங்கள். நறுக்கிய இஞ்சி போட்டு வதக்கவும். தற்போது அரைத்த வெங்காய பேஸ்டை கொட்டி அடுப்பை சிறு தீயில் வைத்து  வதக்கி கொள்ளுங்கள். பச்சை வாசனை போனதும் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.

அதனுடன், தக்காளி, பச்சை மிளகாய், தயிர் ஆகியவற்றை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.  நன்றாக கொதித்ததும் அதில், காளான் சேர்த்து கொள்ளவும். அவை வெந்ததும் இறக்கி பரிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aalu Potato Recpie


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->