குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என குழப்பமா? உங்களுக்காக சூப்பர் ரெசிபி..! - Seithipunal
Seithipunal


உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்களா? அப்போ அவர்களுக்கு தினமும் ஏதாவது சுவையாகவும் வித்யாசமாகவும் உணவுகளை செய்து கொடுக்க விரும்புவோம். அவர்களுக்காக சுவையான சாக்லேட் தேங்காய் பால்ஸ் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்.

தேவையானவை :

தேங்காய் துருவல் - 200 கிராம் மேரி பிஸ்கட் ( Marie gold biscuits) - 10 சாக்லேட் பவுடர் - 4 ஸ்பூன் வென்னிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன் கன்டன்ஸ்டு மில்க் - 150 கிராம் பால் - அரை கப் வெண்ணெய் - 2 டீஸ்பூன் (உருகியது) 

அலங்கரிக்க :

தேங்காய் துருவல் - தேவையான அளவு

செய்முறை :

மேரி பிஸ்கட்டை பொடித்து கொள்ளுங்கள். ஒருபாத்திரத்தில் பொடித்த பிஸ்கட் தூள், சாக்லேட் பவுடர், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அடுப்பில் நான்ஸ்டிக் பாத்திரத்தை வைத்து அதனுடன் பிஸ்கட் கலவையை சேர்க்கவும். அதன்பின்னர், கன்டன்ஸ்டு மில்க், உருக்கிய வெண்ணெய், வென்னிலா எசன்ஸ், பால் ஆகியவற்றை மிதமான தீயில் கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஆறவைக்கவும். ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். அதன்பின் தேங்காய் துருவலில் சேர்த்து பிரட்டி கொள்ளவும். இதனை பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை  வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chocolate Coconut Ball Recipe


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->