எலும்புகளுக்கு வலுவலிக்கும் கேழ்வரகு.. அசத்தலான லட்டு செய்து சாப்பிடலாம்..! - Seithipunal
Seithipunal


கேழ்வரகில் உடலுக்கு தேவையான ஊட்டசத்துகள் அதிக அளவில் உள்ளன. குழந்தைகளுக்கு கேழ்வரகு உணவுகளை கொடுத்து வர அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கு நன்மைபயக்கும். எப்படி கேழ்வரகில் சுவையான லட்டு செய்வது என தெரிந்து கொள்ளவும்.

தேவையானவை :

கேழ்வரகு மாவு - 1 கப் வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 கப் (துருவியது) நெய் - 2 மேசைக்கரண்டி முந்திரி - 1 தேக்கரண்டி கருப்பு எள் - தேக்கரண்டி திராட்சை - 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை சுக்கு தூள் - 1 சிட்டிகை

செய்முறை :

வெல்லத்தை பாகுகாய்ச்சி கொதிக்கவைத்து கொள்ளவும். எள்ளை வறுத்து எடுத்து கொள்ளவும்.கேழ்வரகு மாவை இளஞ்சூடாக வாசனை வரும் வரை வறுத்தெடுத்து, சூடாக இருக்கும் போது அதனுடன் வெல்லம், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை, எள், ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை அதில் சேர்த்து உருண்டை பிடிக்கும் பதம் வரும் வரை கலந்து கொள்ளவும். 

அதன்பின், அதனை லட்டுகளாக பிடித்து வைத்து காற்றுபுகாத டப்பாவில் அடைத்து வைத்து பள்ளிக்கு கொடுத்தனுப்பலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kezhvaraku laddu For Kids


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->