எப்போதும் போல இல்லாமல் சற்று வித்யாசமான முறையில் அசத்தலான கேசரி ரெசிபி..! - Seithipunal
Seithipunal


பெரும்பாலும் வீடுகளில ரவா கேசரி, பால் கேசரி போன்றவை செய்வோம். அதற்கு மாற்றாக, தற்போது சுவையான பழக்கேசரி எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்.

தேவையானவை :

ரவை - 1 கப் சர்க்கரை - 1 கப் பழத்துண்டுகள் - 1 1/2 கப் நெய் - விருப்பத்திற்கேற்ப முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை - விருப்பத்திற்கேற்ப ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன் கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை

செய்முறை :

பழங்களை நறுக்கி கொள்ளவும்.வாணலியில் முந்திரி திராட்சையை வறுத்து கொள்ளவும் அதே வாணலியில் பழங்களை ஈட்டு வறுத்து கொள்ளவும். அதே வாணலியில் மேலும் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, ரவையை கொட்டி ஓரிரு நிமிடங்கள் வறுத்து, இறக்கி வைத்து கொள்ளுங்கள். 

அடிகனமான ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் ரவாவை சேர்த்துமிதமான தீயில் வைத்து, ரவையை கொட்டிக் கிளறவும். அதனுடன் சர்க்கரை சேர்க்கவும்.ஏலக்காய்த் தூள், கேசரி பவுடரை சேர்த்து வதக்கி வைத்துள்ள பழத்துண்டுகள், சிறிது நெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கி பரிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mixed Fruit Kesari Recipe


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->