காலையில் விரைவாக ப்ரெக்பாஸ்ட் செய்ய வேண்டுமா? அப்போ உங்களுக்காக சூப்பர் ரெசிபி..! - Seithipunal
Seithipunal


காலையில் சீக்கிரமாக சமைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்காக சுவையாக அதே நேரத்தில் விரைவாக செய்து கொடுக்கும் சேமியா வெஜிடம்பிள் கிச்சடி தயார் செய்வது என பார்போம்.

தேவையானவை :

சேமியா - 1 கப் பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 3 இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் உருளைக்கிழங்கு - 1 கேரட் - 1 பீன்ஸ் - 4 கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் பட்டை - 1 கிராம்பு - 5 பிரியாணி இலை - 2 கறிவேப்பிலை - 1 கொத்து கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து நீரை கொதிக்க விடவும். மற்றோரு அடுப்பில் வாணலியை வைத்து வறுத்து கொள்ளுங்கள்.கொதிக்கும் நீரில் அந்த சேமியாவைப் போட்டு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, இறக்கி மூடி தனியாக வைத்து கொள்ளவும். காய்கறிகளை வேகவைத்து கொள்ளுங்கள்.

சேமியாவை உதிர்த்து கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி  அது காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து கொள்ளுங்கள். வதங்கியதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

அதில் , வேகவைத்த காய்கறிகளை சேர்த்து கொள்ளுங்கள்.வேக வைத்த சேமியாவை போட்டு கிளறி தட்டால் வாணலியை மூடி 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Semiya Vegitable Kichady


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->