நாவூற வைக்கும் சோயா லாலிபாப், உடனே செய்து பாருங்கள்..! - Seithipunal
Seithipunal


சோயாவில் உடலுக்கு தேவையான புரதம் அதிக அளவில் நிறைந்துள்ளது. சோயாவில் சுவையான பல ரெசிப்பிகள் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம். தற்போது சோயாவில் சுவையான லாலிபாப் எப்படி செய்வடு என பார்போம்.

தேவையானவை :

மீல்மேக்கர் - கால் கப் உருளைக்கிழங்கு - 1 ப.பட்டாணி - ஒரு கைப்பிடி பெ.வெங்காயம் - 1 கேரட் - 1 குடை மிளகாய் - 1 உப்பு - தேவைக்கு மிளகுத்தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு ஐஸ் குச்சிகள்

செய்முறை:

வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைகிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளுங்கள். கேரட்டை துருவி கொள்ளவும். கொதிக்கும் நீரில் சோயாவை போட்டு அரைத்து கொல்லவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் குடை மிளகாய், கேரட், பட்டாணியை கொட்டி வதக்கவும்.

அவை நன்றாக வதக்கியவுடன் சோயவை சேர்த்து வதக்கி கொள்ளவும். நன்றாக மசாலா சேர்ந்ததும் அவற்றை இறக்கி வைத்து கொள்ளவும்.நன்கு ஆறியதும் சோயா கலவையுடன் மசித்த உருளைக்கிழங்கு, மிளகு தூள் கலந்து கொள்ளவும். இதனை உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் செய்து வைத்திருந்த உருண்டைகளை பொறித்தெடுத்து நடுவில் ஐஸ் குச்சிகளை சொருகினால் சோயா லாலிபாப் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Soya Lolipop recipe


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->