வேப்பம் பூவில் வடகம் செய்து இருக்கிறீர்களா? - Seithipunal
Seithipunal


கோடைக்காலத்தில் அந்த வருடம் முழுவதிற்கும் தேவையான வடகம் போன்றவை செய்து வைத்திருப்போம். இன்று வேப்பம்பூவில் சுவையான வடகம் எப்படி செய்வது என அறிந்துகொள்வோம்.

தேவையானவை:

காய வைத்த வேப்பம்பூ - 3 கப்
உளுந்து - 1 கப்
மிளகு - 1 தேக்கரண்டி
பெரிய சீரகம் - 1 மேசைக்கரண்டி
சிறிய சீரகம் - 1 மேசைக்கரண்டி
வெட்டிய வெங்காயம் - 1/2 கப்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
மிளகாய் பிளேக்ஸ் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மிளகு, பெரிய சீரகம், சிறிய சீரகம் ஆகியவற்றை பொடித்து கொள்ளவும். ஊறவைத்த உளுந்தை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் காய்ந்த வேப்பம் பூ மற்றும் ஏனைய பொருட்கள்  சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து கொள்ளவும்.

அதனை உருண்டைகளாக உருட்டி சிறிது வடை போல தட்டையாக்கி  சுத்தமான துணியில் காயவைத்து எடுத்தால் சுவையான வடகம் தயார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vemboo vatakam


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->