காதலில் விழுந்தாரா லக்ஷ்மி மேனன்!

February 13, 2016 6:26 am
காதலில் விழுந்தாரா லக்ஷ்மி மேனன்!

சேர்ந்தாப்ல இரண்டு படங்களில் நடித்தாலே நாயகனையும், நாயகியையும் ‘சேர்த்து வைக்கும்’ வேலையைத் தொடங்கி விடுவார்கள் கோடம்பாக்கத்து திருவாளர்கள்.

இந்த லட்சணத்தில் தொடர்ந்து நான்கு படங்களில் வாய்ப்பு கொடுத்தால் அந்த இயக்குநரையும், நாயகியையும் வைத்து கிசுகிசுக்காமல் விடுவார்களா என்ன?

அப்படித்தான் ‘குட்டிப்புலி’ பட இயக்குநர் எம். முத்தையாவையும், லட்சுமிமேனனையும் இணைத்து ஹாட்டாக ஒரு லவ் மேட்டர் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த செய்தி பரவ ஆரம்பித்ததும் இந்த நிமிடம் வரை டைரக்டர் முத்தையை தன் தரப்பில் வாய் திறக்கவே இல்லை. மாறாக ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ படங்களைத் தொடர்ந்து விஷாலை வைத்து இயக்கி வரும் ‘மருது’ படத்திலும் அவரையே கதாநாயகியாக்க முடிவு செய்தார். படத்தின் நாயகன் விஷாலோ அதற்கு தடை போட்டு விட, இப்போது ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார்.

இருந்தாலும் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத முத்தையா தான் அடுத்து விக்ரம்பிரபுவை வைத்து இயக்கப்போகும் படத்தில் லட்சுமிமேனனை கமிட் செய்திருக்கிறாராம்.

இப்படி தொடர்ச்சியாக தான் இயக்குகிற படங்களில் லட்சுமிமேனனை கதாநாயகியாக்கி அழகு பார்க்கும் முத்தையா அவரை காதலிக்காமலா? தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறார் என்று கேள்வி கேட்கிறார்கள் அவருடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பவர்கள்.

ஹாட்டான இந்த மேட்டரில் அவர் வாயை திறக்கிறாரோ? இல்லையோ? நல்ல வேளையாக லட்சுமிமேனன் வாய் திறந்து விட்டார். சமீபத்தில் மிருதன்  பட புரமோஷனுக்கு வந்திருந்தவரிடம் அந்த கிசுகிசுவை கேட்டோம். உங்களுக்கும் இயக்குநர் முத்தையாவுக்கும் இடையே காதலாமே? அதனால் தான் அவர் இயக்குகிற படங்களில் உங்களுக்கு தொடர்ச்சியாக கதாநாயகி வாய்ப்பு தருகிறார் என்றோம்.

கேள்வியை எதிர்கொண்ட லட்சுமிமேனன் முகத்தில் கொஞ்சமும் டென்ஷன் இல்லை.

என் மீது அவருக்கு காதலா? இருந்தாலும் இருக்கலாம். அதைப்பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு இதுவரை அவர் மீது காதல்வரவில்லை என்றார்.

மருது படத்தில் விஷால் ஜோடியாக உங்களைத்தான் முதலில் ரெகமெண்ட் செய்தாராமே? என்று கேட்டபோது ”அந்தப் படத்தில் நடிக்க வைப்பதற்காக கேரளாவில் என் வீட்டுக்கு வந்து கதை சொன்னது உண்மைதான். அதன்பிறகு அவர்கள் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அதன்பிறகு அதில் ஸ்ரீதிவ்யா நடிப்பதாக தகவல் வந்தது” அவ்வளவு தான் என்றார் கூலாக.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media