வசிகரமான முகம் வேண்டுமா, இதோ இருக்கு இயற்கை வைத்தியம்

வசிகரமான முகம் வேண்டுமா, இதோ இருக்கு இயற்கை வைத்தியம்

குளிர்ந்த பாலில் பஞ்சினைத் தோய்த்து முகம் துடைப்பது சிறந்தது. தேங்காய் உடைத்ததும் கிடைக்கும் தேங்காய்த் தண்ணீரும் நல்ல க்ளென்சிங் தான்.

1. சந்தனம், ஜாதிக்காய், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நைசாக அரைத்து முகத்தில் பூசினால் கருப்பு திட்டு, மங்கு போன்றவை மறையும்.

2. வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கருமை காணாமல் போகும்.

3. முட்டைகோஸின் வெளிப்புற இலைகளை எடுத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து கைகளில் பூசி வர சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் கருமை நிறம் மாறி சிவந்து விடும்.

4.சிறிது வெங்காயச்சாறு, ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு, ஆலிவ் ஆயில், பயத்தம் மாவு சிறிது கலந்து கழுத்தில், கீழிருந்து தாடை நோக்கி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். நாளடைவில் கழுத்தில் உள்ள கருமை மறைந்து அழகான கழுத்தாக மாறிவிடும்.

5. தர்பூசணிச் சாறி, பாசிபயரு மாவு கலைவை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் புதுப்பொலிவு கிடைக்கும்.

6. பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசலாம். இது இயற்கையான ஸ்க்ரப்.

.

குழுசேர்

கருத்து கணிப்பு

How Is My Site?

View Results

Loading ... Loading ...

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares