அழகின் அளவை காட்டும் Himirro வின் ‘மாடர்ன்’ எலக்ட்ரானிக் கண்ணாடி!

அழகின் அளவை காட்டும் Himirro வின் ‘மாடர்ன்’ எலக்ட்ரானிக் கண்ணாடி!

கடந்த காலத்து பெண்மணிகள் முகத்துக்கு மஞ்சள், சந்தனம், கடலை மாவு, வாசனைக்கு ஜவ்வாது, தலைக்கு சிகைக்காய், செம்பருத்தி இலையை அரைத்து தலையில் போட்டு அழகிய நீண்ட கூந்தலை வளர்த்தனர். கைகளுக்கு மருதாணி போன்றவற்றை பயன்படுத்தி அழகுக்கு மேலும் அழகுசேர்த்து வந்தனர்.

ஆனால் தற்போதைய உள்ள நவீன உலகத்தில், அழகு சாதனப்பொருட்கள் எண்ணற்ற அளவில் கொட்டி கிடக்கின்றன. முகம், கண், மூக்கு, உதடு, கை, கால் என ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனியே அழகு சாதனம். இதை தயாரிக்கும் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு விற்பனையில் குதிக்கின்றனர். காரணம், கியூரியாசிட்டி. புரியும்படி சொல்லணும்னா இந்தகாலத்து பெண்களின் பேராசை.

electronic-mirror-2

பெண்கள் எவ்வாறு பிறந்தாலும் சரி, அழகாக இருக்க வேண்டும், கருப்பாக இருத்தல் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கின்றன அழகு சாதன நிறுவனங்கள். மக்கள் மீது அளவுக்கு அதிகமான அக்கறையின் புது வடிவமாக Himirro என்ற அழகு சாதனம் தயாரிக்கும் நிறுவனம் எலக்ட்ரானிக் கண்ணாடியை தயாரித்திருக்கிறது.

அதாவது, நமது முகம் எந்தளவு சுத்தமாக மேக்கப் கலையாமல் இருக்கிறது என்பதை காட்டும் கண்ணாடியே அது. இந்தக் கண்ணாடி இரண்டு வகையில் வருகின்றன. ஒன்று வீட்டில் பாத்ரூமில் மாட்டிக்கொள்ளும் விதத்தில், மற்றொன்று பர்ஸில் வைத்துக்கொண்டு செல்லும் இடமெல்லாம் நம் அழகின் அளவு குறையாமல் இருக்கின்றதா என்பதை பார்த்துக்கொண்டு செல்வதற்கு.

நம்மிடம் இருக்கும் ஸ்மார்ட்போனின் Bluetooth மற்றும் wi-fi மூலம் இதை கனெக்ட் செய்துகொண்டு நம் முகத்தில் என்ன குறைந்திருக்கிறது, எது கூடியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். பருக்களின் அளவு, முகத்தில் இருக்கும் அழுக்குகள், கரும்புள்ளிகள் என அனைத்தையும் காட்டி கொடுத்துவிடும் அதற்கென்றே கண்ணாடி முன்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்தக் கண்ணாடியை வாங்கும்போது, அந்த நிறுவனத்தின் அழகு சாதனப்பொ ருட்களையும் வாங்கி கொள்ள வேண்டும். இந்த கண்ணாடி அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனக்கு வந்ததில் இருந்து இதன்மீது அதிகப்படியாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. விலை மிக அதிகம் என்பதே.

electronic-mirror-1

உண்மையிலேயே மக்கள் மீது அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பவர்களுக்கு எத்தனை நம்பிக்கை இருந்தால் மிகப்பெரிய தொகையில் தங்கள் பொருளைத் தயாரிப்பர். குற்றம் சாடியவர்களில் பெரும்பாலும் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். நடுத்தரக் குடும்பத்தில் இருக்கின்றவர்கள்தான் ஆசைகளில் அதிகம் இழுக்கப்படுகின்றனர். ஆசைகள் அடங்காதவரை அழகு சாதனப்பொருட்கள் விற்பனைக்கு வருவது குறையாது.

இக்காலத்தில் விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விற்கும் காய்கறிகள் ,கனிகள் மற்றும் சாப்பாடு பொருட்களை வீடு தேடி வந்து விற்றால் அவர்களிடம் பேரம் பேசி பொருட்களை வாங்கும் மக்கள் அழகு சாதனங்கள் புதியதாக வந்தால் எவ்லோவாக இருந்தாலும் வாங்கி உபயோகிக்கிறார்கள். இந்த நிலைமை எப்பொழுது மாறுகிறதோ அன்று தான் அழகு சாதனம் நிறைந்த பொருட்களின் விலைகள் குறையும். மேலும், இந்தகாலத்து பெண்களின் கைகளிலில் தான் அழகு சாதன பொருட்களின் விலை ஏற்ற தாழ்வு உள்ளது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media