” 10 வயக்ரா எஃபெக்ட் ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி”! இன்னிக்கி சன்டே என்ஜாய் பண்ணுங்க!

December 18, 2016 6:51 am
” 10 வயக்ரா எஃபெக்ட் ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி”! இன்னிக்கி சன்டே என்ஜாய் பண்ணுங்க!

ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி உங்கள் வீட்டிலேயே சமைத்து ருசிக்க என்ன வழி, ஏற்கனவே அறிவித்தபடி “லைவ் டே” ஆம்பூருக்கே நேரில் சென்று செய்முறையை அறிந்து அதன் விவரங்களை துல்லியமாக வெளியிட்டிருக்கிறது. வாசகர்களே உங்கள் வீட்டிலேயே ஆம்பூர் பிரியாணியை சமையுங்க ஞாயிற்றுக் கிழமையை என்ஜாய் பண்ணுங்க.

ஒரு கிலோ சிக்கன் பிரியாணி தயாரிப்பதற்கு என்னென்ன பொருட்கள் தேவை.. 1-கிலோ சீரக சம்பா அரிசி. 1-கிலோ கோழிக்கறி. கடலை எண்ணெய் 250கிராம், பூண்டு (அரைத்த)120-கிராம், இஞ்சி 120-கிராம்,மிளகாய்தூள்20-கிராம், வெங்காயம்200-கிராம் தக்காளி,150-கிராம், கொத்தமள்ளி,புதினா 2-ரூய்க்கு, எலுமிச்சைபழம் -2, தயிர் 150-கிராம், பட்டை,லவங்கம்,ஏலக்காய் 2-ரூ. ( இந்தமூன்றையும் அதிகம் போட்டுவிட்டால் வாசனை தூக்கலாக இருக்கும் ஆனால்சாப்பிட முடியாமல் பிரியாணி தெகட்டிவிடும்),உப்பு தேவையானஅளவு, ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

இதுவே மட்டன் பிரியாணி என்றால் ஆயில் மட்டும் 300-கிராம் சேர்க்க வேண்டும். மற்றபடி மசாலா எல்லாம் ஒரே அளவுதான். மேலும் சிக்கன் மட்டன் என்று எந்த இறைச்சியானாலும் சரி,இறைச்சியை கழுவி அடுப்பில் உள்ள பாத்திரத்தில் போட்டவுடனே உப்பை போட்டுவிடவேண்டும்.அப்போதுதான் அது இறைச்சிக்குள் நன்றாக சேரும். சிலர் கடைசியாக போடுவார்கள் அதனால் ருசி மாறிவிடும்.

செய்முறை: முதலில் பிரியாணி சமைக்கக்கூடிய குண்டானை (பாத்திரம்) அடுப்பில் வைக்க வேண்டும்.அதற்கு தீ மூட்டிய பின்னர் ஆயில் ஊற்ற வேண்டும்,அது சூடான உடன்பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகியவற்றை போட்டு ஒரு பத்து நொடிக்கெல்லாம் அரைத்து வைத்துள்ள பூண்டு விழுதை அதில் போட்டு கொஞ்சமாக ரோஸ்ட் ஆகும்வரை கலக்கிவிட்டு,உடனே இஞ்சி கலந்து அதுவும் ரோஸ்ட் கலர்வரவேண்டும்.

அப்படி வந்ததும் சிக்கனோ அல்லது மட்டனோ அதில் போட்டுவிட்டு உடனே உப்பை சேர்க்கவேண்டும். பிறகு மிளகாய்த்தூள்,தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, புதினா, ஆகியவற்றை அந்தபாத்திரத்தில் கலந்துமூன்று நிமிடம் வரை கலக்கினால் சிறியதாக ரோஸ்ட் கலருக்கு மாறும். அப்போது எலுமிச்சை சாறு, தயிர்,மற்றும் 250 மில்லி அல்லது300 மில்லிலிட்டர் தண்ணீரை(ஒரு டம்ளர் ) ஆகியவற்றை ஊற்றிவிட்டு அந்த குண்டானுக்கு மூடிபோட்டு அப்படியே ஐந்து நிமிடம் அடுப்பில் வைக்கவும்.

இந்த அடுப்புக்கு பக்கதிலேயே ஒரு கிலோ அரிசி வேகவைக்கக் கூடிய அளவுக்கு தண்ணீரை நன்றாககாய்ச்சிக் கொள்ளவும்.சூடு அதிகமாக இருக்கவேண்டும் அப்போதுதான்சாதம் உடையாமல் இருக்கும். அதில் அரைமணி நேரத்துக்கு முன் ஊற வைத்த சீரகசம்பாஅரிசியையும் தேவைக்கேற்ப உப்பையும் போட்டு அரை வேக்காட்டிலேயே அரிசையை அதிலிருந்து எடுத்து இரண்டு மூன்று முறைவ டிகட்டிவிட்டு அதற்குபின்னரே அரிசியை கறிவேகவைத்துள்ள பாத்திரத்தில்போட்டு கலக்கிவிட்டு மீண்டும் மூடிவிடவும்.

இவற்றை நீங்கள் கேஸ் அடுப்பில் செய்தால் மெழுகுவர்த்தி எரியுமே அந்த அளவுக்குத்தான் தீயை வைக்க வேண்டும்.கூடவே அரிசியை வேகவைத்து வடிகட்டிய கஞ்சியை அந்த பாத்திரத்தோடு அப்படியே சூடாகபிரியாணி வெந்துக்கொண்டிருக்கும் குண்டான் மீது வைத்துவிடவேண்டும்.அப்படியே கால் மணிநேரம் விட்டால் போதும் ஆம்பூர் பிரியாணி சூப்பர் ருசியோடு ரெடியாகிவிடும்.

இதுல நாட்டுக் கோழி பிரியாணியும் செய்கிறார்கள். அது 10

Viagra

வயக்ரா அளவுக்கு பவர் என்பதால் அதற்கு ஏகப்பட்ட மவுசு. அதையும் இதே பாணியில்தான் தயாரிக்கிறார்கள். ஆனால் கோழியை கிராமம் கிராமமாக தேடிப்போய் வாங்கி வருவதே முழுமையான வயக்ரா எஃபெக்ட் கொடுக்கும்.

குறிப்பு:கண்டிப்பாக நெய், டால்டா, அஜினாமோட்டோ, மற்றும் கலர், ஆகியவற்றை ஆம்பூர் பிரியாணியில் சேர்பதில்லை நீங்களும் அவற்றை சேர்க்காமல் ருசியாக சமைத்து ஆரோக்யமாக இருங்கள்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media