வலை தளங்களின் மூலம் விபச்சாரம், திருங்கைகளின் புது டெக்னிக்!

December 18, 2016 9:52 am
வலை தளங்களின் மூலம் விபச்சாரம், திருங்கைகளின் புது டெக்னிக்!

கஸ்டமர்களை தேடிப்போன காலம் போய், கஸ்டமரை தேடி வரவைக்கும் காலமாக மாறிவிட்டது. பேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவைகளால் சபல மனிதர்களை மடக்கும் திருநங்கைகள்.

திருநங்கைகள் இந்த நூதனமான விபச்சார யுக்தியை அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மீதே பயன்படுத்துகின்றனர். வலைத்தளங்களில் இவர்கள் மசாஜ் பார்லரின் அம்சங்கள் என்று ஒரு லிஸ்ட்டே வைத்திருக்கிறார்கள். அதில் 5500 இருந்து ஆரம்பித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை இருப்பதாக கூறுகிறார்கள்.

ஒரு காலத்தில் திருநங்கைகள் என்றாலே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தான் சமூகத்தில் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள். திருநங்கைகளில் ஆட்டோ ஒட்டுவது முதல் ஐபிஎஸ் வரை தங்களது திறமைகளால் முன்னேறி வரும் வேளையில் ஒரு சிலரது வக்ர புத்தியால் களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று மற்ற திருநங்கைகள் அஞ்சுகின்றனர்.

தங்களுக்கென்று இருக்கும் அடையாளத்தை வைத்து குறுகிய காலத்தில் பணம் சம்பாதித்து விடலாம் என்ற ஆசையில் இந்த விபச்சாரத்தில் சில திருநங்கைகள் ஈடுபட்டு வருகின்றனர். கிராஸ் டிரெஸ்ஸிங் என்பது ஆண், பெண் உடையை மாற்றி அணிந்து கொண்டும், சிலேவ் செசன்ஸ் என்பது சினிமா படத்தில் காட்டுவது போல கண்ணை கட்டி, கையை பின்னாடி கட்டி, கறுப்பு நிற உடையணிந்து கஸ்டமர்களை அழைத்து சென்று விபச்சாரத்தில் ஈடுபடுவார்களாம்.

இவர்களின் வலைத்தளத்தில் நீங்கள் ஒரு முறை தொடர்பு கொண்டால், நம்மை பற்றி உறுதி செய்து கொண்டபிறகு ஒரு மொபைல் எண்ணை அனுப்புவார்கள். அதில் தொடர்பு கொண்டால் எங்கும் வர வேண்டும் என்ற விபரத்தை கூறுவார்கள். நீங்கள் அவ்வாறு சென்றால் அவர்களது இடத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவிற்கு உங்களை அழைத்து செல்வார்கள்.

மறுபடியும் உங்களை தொடர்பு கொள்வார்கள். நீங்கள் விரும்பவில்லை என்றால் உங்களை மிரட்டுவதுடன் வேறு கஸ்டமரை அறிமுகப்படுத்த சொல்லி வற்புறுத்துவார்கள். ஒரு சில திருநங்கைகளின் தவறான செயல்களால் ஒட்டு மொத்த திருநங்கைகளின் வாழ்க்கையும் அசிங்கப்படுத்தப்படுகிறது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media