கணவனைக் கொல்ல வரவழைத்த கள்ள காதலன்,ஆனால் நடந்தது..! கடவுள் இருக்கான் குமாரு..!

கணவனைக் கொல்ல வரவழைத்த கள்ள காதலன்,ஆனால் நடந்தது..! கடவுள் இருக்கான் குமாரு..!

பிரதீப் பெரிய கோடீஸ்வரன். பிசினஸ்மேன்,அவனது மனைவியும் வசதி படைத்தவர் பெயர் நான்சி.( பெயர்கள் மற்றப்பட்டுள்ளது) மனைவியை நன்றாகக் கவனித்தான் பிரதீப்.ஆனால் அவனிடம் உள்ள ஒரே குறை எப்போதும் பிசினஸ.., பிசினஸ்.., பிசினஸ். பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும். அதனால் செக்ஸில் அவனுக்கு நாட்டம் இல்லை.

இங்குதான் இருவருக்கும் பிரச்னை எழுந்தது. நான்சிக்கு எப்போதும் கணவன் அருகில் இருக்க வேண்டும் அல்லது வாரம் ஒரு நாளாவாது தன்கூட இருந்து அன்பு காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.ஆனால், பிரதீப் அதை கண்டுகொள்ளவில்லை.இந்த நேரத்தில் முகநூல் மூலம் அறிமுகம் ஆனான் கார்த்திக்.அழகான இளைஞன்.

இருவருக்கும் உள்ள நட்பு தகாத காதலாக மாறியது.ஒரு நாள் கார்த்திக்கை வீட்டிற்கு வரச்சொன்னார் நான்சி.அவனும் ஒரு நாள் வந்தான்.அவனது அழகை கண்டு அசந்து விட்டாள் நான்சி. நேரில் இன்னும் அழகாக இருந்தான் கார்த்திக்…! அறுசுவை உணவு படைத்தல்

சாப்பிட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அவள் தானாகவே அவனுக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். அவ்வளவு தான்.. பற்றிக் கொண்டது. அடிக்கடி வரச்சொன்னாள் அவனும் வந்தான். கைநிறைய பணம் கொடுத்தாள். பரிசுப் பொருட்களால் அவனைக் குளிப்பாட்டினாள்.

ஒரு நாள் கணவனுக்குத் தெரிந்தது.பெரும் சண்டை அடித்து துவைத்து விட்டான் பிரதீப்.அன்று இரவு அவள் முடிவு செய்தாள்.கணவனை கொலை செய்து விடுவது என்று…!! கார்த்திக்கிடம் சொன்னாள்.

திட்டம் தீட்டினார்கள்.அன்று இரவு கணவனை கொலை செய்துவிட பிளான் போட்டார்கள். பாலில் தூக்க மாத்திரை போட்டு கொடுத்தாள்.
பிரதீப்பும் குடித்துவிட்டு மயங்கிவிட்டான்.கேட்டை திறந்து வைத்து விட்டுக் காத்திருந்தாள் நான்சி. இரவு பதினோரு மணிக்கு நைலான் கயிறோடு வந்தான் கார்த்திக்.

கேட்டை திறந்து வராந்தா வருமுன் கார்த்திக் அம்மா என்று அலறினான். மரண வலியில் கார்த்திக் கத்த, அக்கம் பக்கம் அனைவரும் விழித்துக் கொண்டர்.நான்சி அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்தாள். ஒரு பெரிய தென்னை மரத்தில் இருந்து காய்ந்த தேங்காய் ஒன்று கார்த்திக் தலையில் விழுந்திருக்கிறது. வேகமாக விழுந்ததால் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தான் கார்த்திக்.

ஆடிப் போனாள் நான்சி. போலிஸுக்கு தகவல் சென்றது , போலீஸ் வந்து விட்டது. அவர்களுக்கு புரிந்து விட்டது. காரணம் கணவன் பிரதீப் மயங்கிக் கிடந்தான்..!
நான்சியை தூக்கி வந்து தங்கள் பணியில் விசாரிக்க உண்மையை ஒத்துக் கொண்டாள். கார்த்திக் அந்த இடத்திலேயே இறந்த போனான்.இன்று.. நான்சி ஜெயிலில். கணவன் நடை பிணமாக சுற்றிக் கொண்டிருக்கிறான். அன்று இரவு தான் கொலை செய்யப் பட்டிருந்தால்..?

ஆனால் யார் செய்த புண்ணியமோ பிரதீப் தப்பித்தான்..!

கடவுள் இருக்கான் குமாரு..!

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media