விஷால் அல்லு அர்ஜுனை வைத்து லிங்குசாமி உருவாக்கும் மெகா பட்ஜெட் ப்ளான்!

February 7, 2016 10:31 am
விஷால் அல்லு அர்ஜுனை வைத்து லிங்குசாமி உருவாக்கும் மெகா பட்ஜெட் ப்ளான்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லிங்குசாமி. படங்களை இயக்குவது மட்டுமின்றி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பாக படங்களை தயாரிப்பதிலும் ஈடுபட்டு வந்தார்.

கோலி சோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை என்று ஆரம்பத்தில் இவர் தயாரிப்பில் வெளியான படங்கள் வெற்றிப் படங்களாக மாறின. ஆனால் கடைசியாக வெளியான அஞ்சான் மற்றும் உத்தமவில்லன் ஆகிய படங்கள் இவரை ஒட்டுமொத்தமாக கவிழ்த்து விட்டது.இந்நிலையில் சமீபத்தில் வெளியான ரஜினிமுருகன் படம் வெற்றிப் படமாக மாறியிருக்கிறது.

ஆனால் கடைசியாக வெளியான அஞ்சான் மற்றும் உத்தமவில்லன் ஆகிய படங்கள் இவரை ஒட்டுமொத்தமாக கவிழ்த்து விட்டது.இந்நிலையில் சமீபத்தில் வெளியான ரஜினிமுருகன் படம் வெற்றிப் படமாக மாறியிருக்கிறது.

இதனால் தோல்விப் பாதையில் இருந்து தற்போது வெற்றிப் பாதையில் லிங்குசாமி அடியெடுத்து வைத்திருக்கிறார். இந்நிலையில் தெலுங்கின் டாப் நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனை இயக்கவிருப்பதாக கூறுகின்றனர். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் சம்மதித்து விட்டதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனை ஒரு ஸ்டைலிஷ் ஹீரோவாக லிங்குசாமி காட்டப் போகிறாராம். இதைத் தொடர்ந்து பையா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் வித்யுத் ஜம்வாலை இயக்கவும் லிங்குசாமி முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். தமிழில் சண்டைக்கோழி 2 விலும் விரைவில் லிங்குசாமியை இயக்குனராக பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media