வொய்ல்டுஸ்கிரீன் ஃபெஸ்டிவலில் நேஷனல் ஜியோகிராபி விருதினை வென்ற இந்திய பெண்மணி மலாய்க்கா வஷ்

வொய்ல்டுஸ்கிரீன் ஃபெஸ்டிவலில் நேஷனல் ஜியோகிராபி விருதினை வென்ற இந்திய பெண்மணி மலாய்க்கா வஷ்

சமீபத்தில் நடைபெற்ற வொய்ல்டுஸ்கிரீன் ஃபெஸ்டிவலில் இவரது ‘Waghoba’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. புதிதாக பாதுகாக்கப்படும் மகாராஷ்டிரா மாநில வனப்பகுதி பற்றிய உண்மை கதையை படமாக்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

malaika-vaz

லண்டனில் உள்ள பிரிஸ்டாலில் நடைபெற்ற திரையிடலில் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. மலாய்க்கா, பெங்களூருவைச் சேர்ந்த ஃபெலிஸ் கிரியேஷன்ஸில் உள்ளுறைவாளராக பணியாற்றுகிறார். 17 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இந்தப் படத்தை 2 மாத காலங்கள் எடுத்திருக்கிறார். ஃபெலிஸ் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில், நித்யே சூட் என்பவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்.

இந்த படம் குறித்து மலாய்க்கா, ‘மகாராஸ்டிரா மாநிலத்தின் வனப்பகுதியையொட்டி வாழும் மக்களுக்கு புலியின் மேல் பயத்தினையும், வெறுப்பையும் இந்த படத்தின் மூலமாக காட்டியிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். மலாய்க்கா, இளம் வயதிலேயே அண்டார்ட்டிக்கா மற்றும் ஆர்டிக் துருவப்பகுதிக்குப் பயணம் மேற்கொண்டவர் என்ற சாதனை படைத்து லிம்கா சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media