தங்க மாரியப்பன் உருவ தபால் தலை வெளியீடு

தங்க மாரியப்பன் உருவ தபால் தலை வெளியீடு

ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியா சார்பில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு தபால் தலை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்.

               18530_thumb

சேலம் : ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு அவரது சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தங்கம் வென்று இந்தியா திரும்பிய மாரியப்பன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.இந்நிலையில், மாரியப்பனின் புகைப்படத்துடன் கூடிய தபால் தலையை சேலத்தில் வெளியிட்டு கவுரவித்துள்ளது தபால்துறை. பெரிய வடகம்பட்டியில் உள்ள மாரியப்பன் படித்த பள்ளியில் இந்த தபால் தலை வெளியீட்டு விழா நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media