பைரவா அநீதிகளை அழிக்க பிறந்தவன் #Bairavaa

பைரவா அநீதிகளை அழிக்க பிறந்தவன் #Bairavaa

பரதன் இயக்கத்தில் பைரவா திரைப்படம், வெளியாகிவிட்டது. அழகிய தமிழ் மகனுக்குப்பின் விஜய் மீண்டும் பரதனுடன் இணைந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள், ஒவ்வொன்றாக பார்ப்போம். சொன்ன வார்த்தையைப் படக்குழு காப்பாற்றியிருக்கிறதா?

அழகிய தமிழ் மகன் படத்தில் ஏற்பட்ட திரைக்கதை சொதப்பல் பைரவாவில் இருக்காது என இயக்குநர் பரதன் கூறியிருக்கிறார். பாடல்களையும், டிரெய்லரையும் போல படமும் சரவெடியாக இருக்கவேண்டிய கட்டாயம் இதனால் ஏற்படுகிறது.

நேர்மையான ஆளுங்கலாம் தற்கொலை பண்ணி சாவுறதும், அதற்கு காரணமான காலிப்பயலுக எல்லாம் சந்தோஷமா திரியறதும் இப்பலாம் சகஜமாகிபோச்சுல, அரசாங்கத்துகிட்ட சம்பளம் வாங்கிட்டு இருக்க இந்த சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிங்க போன்ற டிரெயிலரில் காண்பிக்கப்பட்ட வசனங்களால் கத்தி, துப்பாக்கி போன்ற சமூக பிரச்னை சார்ந்த கதை என சொல்லப்பட்டிருக்கிறது.

தெறி பேபி போலவே பைரவாவில் டார்லிங் வசனம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதைவிட, அதிக வசனங்களை வைத்திருக்கிறோம் என எடிட்டர் பிரவீன் கூறியிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத நிலையில், படத்துடன் பார்க்கும் போது சிறப்பாக இருக்கும் என பரதன் சொல்லியிருக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் முதல்முறை நடிக்கிறார். படத்தில் வந்தோம், காதலித்தோம், ஆடினோம் என்று இல்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரம் எனத் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் பரதன்.

பைரவாவில் ஜகபதி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் விஜய்க்கு வில்லனாக நடிக்கின்றனர். இவர்கள் விஜய்யுடன் முதல்முறையாக நடிக்கின்றனர். டேனியல் பாலாஜிக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என சொல்லியிருக்கிறார்கள்.

பைரவா பார்த்து வெளிவரும் ரசிகர்களின் மனதில் , ச்சே இதுபோல் நம்மூரில் கூட நடக்கிறதே என்ற உணர்வு ஏற்படும் அளவுக்குஅனைத்து மக்களின் பிரச்னை சார்ந்த படமாக இருக்கும் என இயக்குநர் கூறியிருக்கிறார்.

இப்படத்தில் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் விஜய் நடித்திருக்கிறார். படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும் எமோஷனல் கலந்த ஆக்‌ஷனாக இருக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.

பைரவா படத்தில் விஜய் டபுள் ஆக்டிங்கா எனக் கேட்ட ரசிகர்களுக்கு படத்தில் பைரவா என்ற ஒரே ஒரு கதாப்பாத்திரத்தில் மட்டும் தான் விஜய் நடித்திருக்கிறார். அந்தக் கதாப்பாத்திரம் படத்தின் திரைக்கதைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறது என்று தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இல்லாத ஒன்றை எதிர்பார்த்துச் சென்று ரசிகர்கள் ஏமாந்துபோகவேண்டாம்.

பைரவா வசனங்களுக்காக பேசப்படும் என்பதில் சந்தேகமே இல்ல. பளிச் வசனங்கள்

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media