நாசாவை ஒரு வாரமாக வச்சு செய்யும் வலைதள வாசிகள்

நாசாவை ஒரு வாரமாக வச்சு செய்யும் வலைதள வாசிகள்

சென்னை: மதிமுகவில் வைகோவிற்கு இணையான தலைவராக இருந்த நாஞ்சில் சம்பத் ஒரே ஒரு இன்னோவா காருக்கு ஆசைப்பட்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளராக அவதாரமெடுத்தார் நாஞ்சில் சம்பத், வெள்ளப்பிரச்சினை பற்றி பேசப்போய், பதவியிழந்தார் அதன் பிறகு செய்தி தொடர்பாளரானார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சில நாட்கள் ஒதுங்கியிருந்த நாஞ்சில் சம்பத், மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறினார். சசிகலாவை பார்த்ததில்லை,அதிமுக தலைமை ஏற்க சசிகலாவிற்கு தகுதியிருக்கிறதா? என வாய்க்கு வந்ததெல்லாம் பேசினார் நாசா.

ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை ஒப்படைத்த சம்பத், அரசியலை விட்டே ஒதுங்கப் போவதாகவும் கூறினார் நான் மானஸ்தன் என நம்ப வைத்தார்.

பின்னர் என்ன நினைத்தாரோ? நாசா, போயஸ் தோட்டத்திற்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசினார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டி அடடே ரகம்.

சசிகலாவிற்கு அனைத்து வித தகுதிகளும் இருக்கிறது. அவரை சந்தித்த உடன் சுதந்திரமாக உணர்ந்தேன் என்றும் தனக்கே உரிய பாணியில் நெகிழ்ச்சியுடன் பேசினார். விடுவார்களா? வலைதள வாசிகள், கடந்த ஒரு வாரமாக வச்சு செய்கிறார்கள்.

நான் விமர்ச்சித்த பிறகும் சசிகலா என்னை சந்திக்க நினைத்ததே நான் பெற்ற பேறு என்று கூறிய சம்பத்திற்காகவே இந்த பதிவு. இந்த டுவிட்டுகளை எல்லாம் அவர் படித்தாரா? பாவம் நாசா

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media