வெளிநாட்டு நிதி: தொண்டு நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு

வெளிநாட்டு நிதி: தொண்டு நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு

வெளிநாட்டு நிதி உதவி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்களும் தங்களின் வருடாந்திர கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

32 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெறும் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியை கண்காணிக்க, எந்த வழிமுறையையும் உருவாக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.

இதையடுத்து, வெளிநாட்டு நிதி உதவி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில், அந்த நிறுவனங்கள், 2014-2015 ம் நிதி ஆண்டில் இருந்து தங்களது வருடாந்திர கணக்கை, ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

மேலும், முந்தைய வழக்கப்படி, காகித வடிவில் தாக்கல் செய்யப்படும் கணக்குகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media