புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப 85% ‘ATM’-கள் தயார் : மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார்..,

புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப 85%  ‘ATM’-கள் தயார் :  மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார்..,

டெல்லி : கடந்த மாதம் 8-ம் தேதி இரவு பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டுகளை ஒழிக்க மேற்கொண்ட இந்த அதிரடி முடிவு அறிவிக்கப்பட்டு ஒருமாத காலம் முடிவடைந்த நிலையில் இன்னும் மக்களிடம் போதிய பண நடமாட்டம் இன்றி வங்கி மற்றும் ‘ATM’ வாசலில் குவிந்துவருகின்றனர்.நாடுமுழுவதும் உள்ள பெரும்பாலான ‘ATM’ மையங்கள் பணமின்றி மூடியே உள்ளன.

Man using a ATM

இந்த நிலையில் நேற்று மக்களவையில் பதிலளித்த நிதித்துறை இணை யமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார்,பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, நவம்பர் 30-ம் தேதிக்குள் நாடு முழுவதும் உள்ள ‘ATM’ இயந் திரங்களில் சுமார் 85% இயந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.புதிய நோட்டுகளுக்கு ஏற்ப ‘ATM’ இயந் திரங்களை மாற்றியமைத்துள்ளதுடன், மைக்ரோ ஏடிஎம் இயந்திரங்களை கிராமப்புற பகுதிகளில் அமைக்குமாறு வங்கிகளுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மக்களவையில் நேற்று குறிப்பிட்டார். எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் அமைச்சர் கூறியுள்ளதாவது:

செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 2,11,594 வங்கி ‘ATM’ மையங்களும், 14,324 வங்கியல்லாத தனியார் ‘ATM’ மையங்களும் இயங்கி வருகின்றன. இதில் 1,79,614 ‘ATM’ இயந்திரங்கள் நவம்பர் 30-ம் தேதி வரையில் புதிய நோட்டுகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தவிர கிராமப்புற பகுதிகள் உள்ளிட்ட துணை சேவை பகுதிகளில் மைக்ரோ ‘ATM’ வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. டிசம்பர் 2-ம் தேதி வரையில் 1,14,036 மைக்ரோ ‘ATM’ இயந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

‘ATM’ இயந்திரங்களை மாற்றியமைப்பதற்கு மாநில கிராமப்புற வங்கிகள் தவிர்த்த இதர வர்த்தக வங்கிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டன என்று கூறினார்.ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு ஆகும் செலவுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூம் ராம் மேகவால், வெவ்வேறு அச்சகங்களுக்கும் ஏற்ப தொகை அளிக்கப்படுகிறது என்றார்.

அந்தந்த அச்சக இயந்திரங்களின் காலம், அச்சக திறன், மனித உழைப்பு மற்றும் இயந்திரங்களின் பணி இவற்றின் அடிப்படையில் தொகை நிர்ணயிக்கப்படுகிறது என்றும், இதற்கான தொகையை அவ்வப்போது ரிசர்வ் வங்கி மாற்றியமைக்கிறது என்றும் மேகவால் கூறினார்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media