இந்தியாவின் ஏவுகணை திட்டம் பிராந்திய அமைதிக்கு ஆபத்தானது – பாகிஸ்தான்

January 12, 2017 12:10 pm
இந்தியாவின் ஏவுகணை திட்டம் பிராந்திய அமைதிக்கு ஆபத்தானது – பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், இந்தியா டிசம்பர் இறுதியில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி–5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தியது. இந்தியாவின் ஏவுகணைகள் திட்டத்தின் மீது கவலையை வெளிப்படுத்து உள்ள பாகிஸ்தான், “பிராந்திய அமைதிக்கு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தானது,” என்று கூறிஉள்ளது என்று அந்நாட்டு பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது.

ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பு (எம்டிசிஆர்), ஜி-7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றால் 1987-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகள், குறிப்பாக குறைந்தது 500 கிலோ எடையுடன் 300 கி.மீ. பறந்து சென்று தாக்கும் திறனுடைய ஏவுகணைகள் பரவலாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 35- வது உறுப்பு நாடாக இந்தியா கடந்த ஜூன் மாதம் இணைந்தது.

இப்போது ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பிடம் தான் பாகிஸ்தான் தன்னுடைய கவலையை வெளிப்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்திக்க அந்நாட்டிற்கு சென்று உள்ள எம்டிசிஆர் குழுவிடம் இந்தியாவின் ஏவுகணைகள் திட்டம் தொடர்பாக பாகிஸ்தான் பேசிஉள்ளது. ஏவுகணை பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் என இந்தியா ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் அமைப்புகளால் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தானது என்று பாகிஸ்தான் எம்டிசிஆர் குழுவிடம் தெரிவித்து உள்ளது என எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் செய்தி வெளியிட்டு உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையின் மூலம் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த முடியும் என பாகிஸ்தான் நம்புவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி கூறிஉள்ளார். பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டும் சீனாவும் அணுஆயுதம் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் விவகாரங்களில் இந்தியா ஐ.நா.வின் வரம்புகளை மீறுகிறது என்று குறிப்பிடத்தக்கது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media